செய்திகள் :

IND vs PAK: "இந்தியாவும் பாகிஸ்தானும் டெஸ்ட் தொடரில் ஆட வேண்டும்" - வாசிம் அக்ரம் விருப்பம்

post image

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான அரசியல் காரணமாக இரு அணிகளும் கடந்த 13 ஆண்டுகளாக இருதரப்பு கிரிக்கெட் தொடரில் ஆடாமல் இருக்கின்றன.

டெஸ்ட் தொடரைப் பொறுத்தவரையில் கடைசியாக 2007-ல் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதின.

அதேபோல், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் கடைசியாக 2012 டிசம்பரில் ஆடியது.

அதன்பிறகு, ஐ.சி.சி தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதி வருகின்றன.

இந்தியா vs பாகிஸ்தான்
இந்தியா vs பாகிஸ்தான்

இவ்வாறிருக்க, கடந்த ஏப்ரலில் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் இந்திய பாகிஸ்தான் இடையே மோதலுக்கு வழிவகுக்கவே, இனி பாகிஸ்தானுடன் எந்தவொரு போட்டியிலும் இந்தியா ஆடக்கூடாது என்று பல்வேறு தரப்பிலிருந்து குரல்கள் வலுத்தன.

அதற்கேற்றாற்போலவே, ஓய்வுபெற்ற வீரர்கள் ஆடும் லெஜண்ட்ஸ் லீக் தொடரில் பாகிஸ்தானுடன் ஆட இந்தியா மறுத்துவிட்டது.

ஆனால், அடுத்த சில நாள்களில் வெளியிடப்பட்ட ஆசிய கோப்பை தொடருக்கான அட்டவணையில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதும்படி ஒரே குழுவில் இடம்பெறச் செய்து செப்டம்பர் 14-ம் தேதி போட்டி திட்டமிடப்பட்டது.

இதற்கு, இந்திய ராணுவ வீரர்களின் ரத்தத்திலும் லாபம் பார்க்க வேண்டுமா என பிசிசிஐ மீது எதிர்ப்புகள் வந்தன.

இத்தகைய சூழலில், இந்தியாவும் பாகிஸ்தானும் டெஸ்ட் தொடரில் ஆட வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரும், கேப்டனுமான வாசிம் அக்ரம் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

தனியார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்திடம் இதை வெளிப்படுத்திய வாசிம் அக்ரம், "இந்தியா, பாகிஸ்தானின் மற்ற போட்டிகளைப் போலவே இதுவும் (டெஸ்ட்) சுவாரஸ்யமாக இருக்கும்.

இரு அணிகளின் வீரர்களும் ரசிகர்களும் ஒழுக்கமாகவும், எல்லை மீற மாட்டார்கள் என்றும் நம்புகிறேன்.

வாசிம் அக்ரம்
வாசிம் அக்ரம்

இந்தியர்கள் தேசபக்தி கொண்டவர்களாகவும், தங்கள் அணி வெற்றி பெற வேண்டும் எனவும் விரும்பினால், பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் அது பொருந்தும்.

இந்தியா சமீப காலமாக சிறந்த ஃபார்மில் உள்ளது. இருப்பினும், போட்டி நடக்கும் நாளில் அழுத்தத்தை சிறப்பாகக் கையாளும் அணிதான் வெற்றிபெறும்.

இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டும் என்பது எனது விருப்பம்.

இது நடந்து மிக நீண்ட காலமாகிவிட்டது. நடந்தால் இரு தரப்பு ரசிகர்களுக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க காட்சியாக இது இருக்கும்" என்று கூறினார்.

BCCI: 'உறவை முறித்துக்கொள்கிறோம்'; டிரீம் 11- பிசிசிஐ ஒப்பந்தம் ரத்து; காரணம் என்ன?

டிரீம் 11 (Dream 11) நிறுவனத்தின் ஒப்பந்தத்தை பிசிசிஐ ரத்து செத்திருப்பதாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்திருக்கிறார்.டிரீம் 11 நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு 358 கோடி ரூபாய்க்கு இந்திய கிர... மேலும் பார்க்க

Pujara: "நீங்கள் இல்லாமல் 2018 ஆஸி-யில் வெற்றி கிடைத்திருக்காது" - புஜாராவுக்கு குவியும் வாழ்த்துகள்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பிடத்தக்க வீரரான புஜாரா, மீண்டும் அணியில் இடம்பிடிப்பதற்கான தனது இரண்டாண்டுக்கால காத்திருப்புக்கு இன்று ஓய்வு அறிவிப்பின் மூலம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார... மேலும் பார்க்க

Pujara: முடிவுக்கு வந்த 2 ஆண்டுக்கால காத்திருப்பு; சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து புஜாரா ஓய்வு

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் டிராவிட்டுக்குப் பிறகு இந்திய அணிக்குக் கிடைத்த நம்பிக்கைக்குரிய வீரர் புஜாரா.100-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் 14 வீரர்களில் ஒருவரான புஜாரா மொத்தம... மேலும் பார்க்க

Dhoni: "இந்திய அணிக்கு தோனி பயிற்சியாளராக வர மாட்டார்" - இந்திய முன்னாள் வீரர் கூறும் காரணம் என்ன?

ஒரு கேப்டனாக இந்திய அணிக்கு மூன்று ஐ.சி.சி கோப்பைகளை வென்று கொடுத்த முன்னாள் வீரர் தோனி, ஒரு தலைமைப் பயிற்சியாளராக அதை நிகழ்த்துவரா என்ற ஏக்கம் பொதுவாகவே ரசிகர்களிடம் உண்டு.2020-ல் தோனி ஓய்வை அறிவித்த... மேலும் பார்க்க

Ashwin: "இதற்கு நான் வீட்டிலேயே இருக்கலாம்..." - ஓய்வு குறித்து டிராவிடிடம் மனம் திறந்த அஷ்வின்!

இந்திய முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் கடந்த டிசம்பரில் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் நடுவில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார்.500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்... மேலும் பார்க்க

"மிட்செல் ஸ்டார்க்குக்கு தமிழ் தெரியுமா..." - ஆஸ்திரேலியர்களுக்கு கோச்சிங் செய்த அஷ்வின்?

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் 2023 பார்டர்-கவாஸ்கர் டிராபியில் நடந்த சர்ச்சைக்குரிய தருணத்தைப் பற்றி அஸ... மேலும் பார்க்க