செய்திகள் :

Ashwin: "இதற்கு நான் வீட்டிலேயே இருக்கலாம்..." - ஓய்வு குறித்து டிராவிடிடம் மனம் திறந்த அஷ்வின்!

post image

இந்திய முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் கடந்த டிசம்பரில் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் நடுவில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார்.

500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய ஸ்பின்னர் என்ற சாதனையைப் படைத்தவர் அஷ்வின். ஒரு தொடரின் நடுவில் ஓய்வு அறிவித்தது வித்தியாசமானதாகப் பார்க்கப்பட்டது.

என்ன பேசினார் Ashwin?

Dravid

இதுகுறித்து முன்னாள் பயிற்சியாளர் டிராவிட் உடனான பாட்காஸ்ட் உரையாடலில் பேசியிருக்கிறார் அஷ்வின். "எனக்கு வயதாகிவிட்டது என்பதை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இறுதியில் நான் அதிகமாக தொடர்களுக்கு சென்று வெளியில் மாற வேண்டியிருந்தது. அந்த நிலைமை வந்தது." என்றார்.

அத்துடன், "அணிக்கு பங்களிக்காமல் இருக்க நினைக்கவில்லை. ஆனால் இதற்கு பதிலாக வீட்டுக்குச் சென்று குழந்தைகளுடன் நேரம் செலவிடலாமா எனத் தோன்றியது. அவர்கள் வளர்ந்துகொண்டிருக்கிறார்கள், நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்? எனத் தோன்றியது... நான் எப்போதுமே 34-35 வயதில் ஓய்வுபெற நினைத்தேன். ஆனால் என்னால் இடையில் அதிகமாக விளையாட முடியவில்லை என்பதுதான் உண்மை..." என்றும் பேசினார்.

அஷ்வின் 2011ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். இந்தியாவில் 65 டெஸ்ட் போட்டிகளில் 383 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வெளிநாடுகளில் விளையாடிய 40 டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரே ஒரு நடுநிலைப் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

"மிட்செல் ஸ்டார்க்குக்கு தமிழ் தெரியுமா..." - ஆஸ்திரேலியர்களுக்கு கோச்சிங் செய்த அஷ்வின்?

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் 2023 பார்டர்-கவாஸ்கர் டிராபியில் நடந்த சர்ச்சைக்குரிய தருணத்தைப் பற்றி அஸ... மேலும் பார்க்க

Chahal: "தீர்ப்பு வாசிக்கும்போது அழுதுவிட்டேன்" - சஹால் உடனான விவாகரத்து குறித்து மனம் திறந்த தனஶ்ரீ

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சஹாலுக்குக் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி குர்கானில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. நடிகை, நடன இயக்கு... மேலும் பார்க்க

Shreyas Iyer: 'இந்திய டி20 அணியில் இடம்பெற ஸ்ரேயஸ் வேறு என்ன செய்ய வேண்டும்?' - ஸ்ரேயஸ் தந்தை வேதனை

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான்... மேலும் பார்க்க

Rahane: ரஞ்சி கோப்பை மும்பை அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகல்; ரஹானே சொல்லும் காரணம் என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரும், மும்பை கிரிக்கெட் அணியின் கேப்டனுமான அஜிங்க்யா ரஹானே, உள்நாட்டு சீசன் தொடங்குவதற்கு முன்னதாக, மும்பை அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கி... மேலும் பார்க்க

Prithvi Shaw: "யாருடைய அனுதாபமும் எனக்கு வேண்டாம்" - சதத்துடன் மீண்டு வரும் பிரித்வி ஷா

இந்திய கிரிக்கெட் அணியில் 18 வயதில் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்ததன் மூலம், பின்னாளில் நட்சத்திர வீரராக ஜொலிப்பார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா, இப்போது ஆளே காணாமல் போய... மேலும் பார்க்க

Asia Cup: 'இந்த அணியை வச்சுகிட்டா நீங்க...'- தேர்வுக்குழுவை விமர்சித்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான்,... மேலும் பார்க்க