செய்திகள் :

ஜார்க்கண்டில் 51 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை! முதல்வர் ஒப்புதல்!

post image

ஜார்க்கண்ட் மாநிலத்தில், சுமார் 51 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலைச் செய்யும் திட்டத்துக்கு, அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் இன்று (ஆக.22) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அம்மாநிலத்தில் உள்ள வெவ்வேறு சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் 103 சிறைக் கைதிகளின் வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பட்டியலில் இடம்பெற்ற 51 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலைச் செய்ய முதல்வர் ஹேமந்த் சோரன் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த முடிவானது, அந்தக் கைதிகள் அனைவரையும் விசாரித்த சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள், காவல் அதிகாரிகள், சிறை அதிகாரிகள் மற்றும் நன்னடத்தை அதிகாரிகள் ஆகியோரது கருத்துக்களைப் பெற்ற பிறகு எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விடுதலைச் செய்யப்படும் கைதிகளின் குடும்பம், சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றின் பின்னணிகளை சரிபார்த்து, சிறையில் இருந்து விடுதலையான பின்னர் அவர்களது மறுவாழ்வுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் சோரன் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, 2019-ம் ஆண்டு முதல் ஜார்க்கண்டின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்ட 619 கைதிகளை மாநில தண்டனை மறுஆய்வு வாரியம் விடுதலைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்தியாவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த தயார்: பாகிஸ்தான் அறிவிப்பு!

Jharkhand Chief Minister Hemant Soren has approved the release of about 51 life-sentenced prisoners in the state.

கொச்சி: பஹல்காம் தாக்குதலில் பலியானவரின் குடும்பத்தினரைச் சந்தித்த அமித் ஷா

பஹல்காம் தாக்குதலில் பலியான என். ராமச்சந்திரனின் குடும்பத்தினரை கொச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்தார்.பாஜக வட்டாரத் தகவலின்படி, வெள்ளிக்கிழமை பாஜக மாநிலத் தலைமைக் கூட்டம் நடைபெற்ற ஹோ... மேலும் பார்க்க

இந்தியாவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த தயார்: பாகிஸ்தான் அறிவிப்பு!

காஷ்மீர் உள்ளிட்ட நிலுவையில் உள்ள அனைத்து பிரச்னைகள் குறித்தும் இந்தியாவுடனான விரிவான பேச்சுவார்த்தைக்குத் தயார் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது மற்றும் பய... மேலும் பார்க்க

பிகாரில் விடுபட்ட வாக்காளர்கள் ஆதார் எண்ணுடன் விண்ணப்பிக்கலாம்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: பிகாரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட அல்லது விடுபட்ட வாக்காளர்கள், தங்களது ஆதார் எண்ணுடன் இணையதளம் வாயிலாகவே மீண்டும் விண்ணப்பிக்க உச்ச நீதிமனற்ம் அனுமதி வழங்கியு... மேலும் பார்க்க

மிசோரமில் ரூ.75.82 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

மிசோரமில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது ரூ.75.82 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மிசோரமில் உளவுத்துறை தகவலின் அடிப்படையில் மிசோரமின் கலால் மற்றும் போதைப்பொருள் தடுப்புத் ... மேலும் பார்க்க

திரிபுராவில் ஓடும் காரில் சிறுமி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது

திரிபுராவில் உதய்பூர் ரயில் நிலையம் அருகே ஓடும் காரில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி, தனது இரண்டு பக்கத்து வீட்டுக்கா... மேலும் பார்க்க

வாகனம் நிறுத்துவது தொடர்பாக தகராறு: வாரணாசியில் ஆசிரியர் கொலை

வாரணாசியில் நிறுத்துவது தொடர்பாக எழுந்த தகராறில் ஆசிரியர் கொலை செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஆதர்ஷ் சிங்கிற்கும், பிரவீன் ஜாவிற்கும் இடையே வியாழக்... மேலும் பார்க்க