செய்திகள் :

ஆக. 30-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

post image

பரபரப்பான அரசியல் சூழலில் வரும் 30ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக பொதுச்செயலர், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் 30.8.2025 (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.எடப்பாடி பழனிசாமி ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

It has been announced that a meeting of AIADMK district secretaries will be held on Aug. 30th.

12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திர... மேலும் பார்க்க

அமித் ஷாவுக்கு தேநீர் விருந்து அளித்த நயினார் நாகேந்திரன்

மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது இல்லத்தில் தேநீர் விருந்து அளித்தார். நெல்லை தச்சநல்லூர் பகுதியில் பாஜகவின் குமரி மண்டல பூத் முகவர்கள் மாநாட்டிற்கு மத்திய உ... மேலும் பார்க்க

சென்னையில் கனமழை

சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வளசரவாக்கம், மதுரவாயல், வானகரம், போரூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்கிறது. ஆவடி, பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், காட்டுப்பாக்கம் ... மேலும் பார்க்க

ஹீரோ ஆசிய ஹாக்கி 2025: கோப்பையை அறிமுகப்படுத்தினார் துணை முதல்வர் உதயநிதி!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பிகார் மாநிலம் ராஜ்கிரில் 29.8.2025 முதல் 7.9.2025 வரை நடைபெற உள்ள ஹீரோ ஆசிய ஹாக்கி கோப்பை 2025ஐ தமிழ்நாட்டில் பொதுமக்களின் பார்வைக்காக இன்று அறிமுகப்படுத்தினார்.ஹீரோ ஆ... மேலும் பார்க்க

திமுகவை அகற்றுங்கள்; தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி: நெல்லையில் அமித் ஷா பேச்சு!

நெல்லை: தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி மீண்டும் வரும் என்று நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார்.வரும் சட்டப்பேரவைத் ... மேலும் பார்க்க

அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் கே.எஸ். ராதாகிருஷ்ணன்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் இணைந்தார். திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் குமரி மண்டல பூத் முகவர்கள்... மேலும் பார்க்க