மீனாட்சி சுந்தரம் தொடர் நிறைவு! இறுதிநாள் படப்பிடிப்பில் அழுத நடிகைகள்!
BCCI: 'உறவை முறித்துக்கொள்கிறோம்'; டிரீம் 11- பிசிசிஐ ஒப்பந்தம் ரத்து; காரணம் என்ன?
டிரீம் 11 (Dream 11) நிறுவனத்தின் ஒப்பந்தத்தை பிசிசிஐ ரத்து செத்திருப்பதாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்திருக்கிறார்.
டிரீம் 11 நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு 358 கோடி ரூபாய்க்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சராக ஒப்பந்தம் மேற்கொண்டது.
மொத்தம் 3 ஆண்டுகள் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் இணையவழி விளையாட்டு ஒழுங்குமுறை மசோதா இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இணையவழி பண விளையாட்டுகள் மூலம் ஏற்படும் நிதி மோசடிகள், பணப் பரிவர்த்தனை குற்றங்கள் மற்றும் மக்களின் நிதி இழப்பைத் தடுக்கும் நோக்கில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனால் இணையவழி பண விளையாட்டு நிறுவனமான டிரீம் 11-ம் பிசிசிஐ நிர்வாகிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில், டிரீம் 11 நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகவும் பிற்காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாது என்றும் ANI செய்தி நிறுவனத்திடம் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், “ ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளதால் டிரீம் 11 உடனான உறவை முறித்துக்கொள்கிறோம். இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களுடன் பிசிசிஐ தொடர்பு வைத்துக்கொள்ளாது” என்று தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...