நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்: திருமுருகன்பூண்டி நகர்மன்ற உறுப்பினர்கள் போராட்டம்!
அவிநாசி: திருமுருகன்பூண்டியில் திமுக வார்டுகளை தவிர, பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் செய்வதைக், கண்டித்து கூட்டத்தில் அனைத்துக் கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் திங்கள்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமுருகன்பூண்டி நகர்மன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு நகர்மன்றத் தலைவர் ந.குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார்.

இதில் பங்கேற்ற, நகர் மன்ற உறுப்பினர்கள், குடிநீர் வசதி, சாக்கடைக் கால்வாய், சாலை வசதி, பொதுக்கழிப்பிடம் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், திமுக வார்டுகளை தவிர, பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவதாக தெரிவித்து, திருமுருகன்பூண்டி அனைத்து கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க: காலை உணவுத் திட்டத்தால் என்ன பயன்? ஆய்வு முடிவுகள் வெளியீடு!