தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு: சுவரை உடைத்து தொழிலாளர்களை மீட்ட தீயணைப்புப் ...
தேசிய நல்லாசிரியர் விருது 2025; தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேர்வு!
தேசிய 'நல்லாசிரியர் விருது' தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி டாக்டர்.ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்க தங்களை முழுமையாக அர்ப்பணித்துள்ள சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் தேசிய 'நல்லாசிரியர் விருது' வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 'நல்லாசிரியர் விருது' தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உள்பட நாடு முழுவதும் 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி மற்றும் சென்னை மயிலாப்பூர் தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல, புதுச்சேரியைச் சேர்ந்த தில்லையாடி வள்ளியம்மை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ராதாகிருஷ்ணனுக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...