AI for Student: மாணவர்களே சூப்பர் மார்க் எடுக்கணுமா? ஏஐ-ஐ இப்படிப் பயன்படுத்துங்க!
உலகின் அனைத்து துறைகளிலும், 'ஏ.ஐ' என்ட்ரி கொடுத்துவிட்டது.
பணிபுரிபவர்கள், தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்கள் தான் ஏ.ஐயைப் பயன்படுத்த முடியும் என்பதில்லை. ஹோம்மேக்கர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட ஏ.ஐ-ஐ சூப்பராகப் பயன்படுத்தி, பயனடையலாம்.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான ஏ.ஐ கைடு இதோ...

1. வகுப்பில் ஆசிரியர் பாடம் எடுக்கும்போது புரியும். ஆனால், வீட்டிற்கு வந்து படித்தால் புரியாது. அப்படியிருக்கையில், உங்களுக்குத் தேவையான டாப்பிக்கை ஏ.ஐ ஆப்பில் உள்ளிட்டு, எடுத்துகாட்டு உடனும், எளிமையாகவும் விளக்கம் பெறலாம்.
2. ஆங்கிலம் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில வார்த்தைகளில் ஒரு சில சந்தேகங்கள் ஏற்படலாம். இதற்கான அர்த்தம், பயன்பாட்டை ஏ.ஐ-யிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.
3. எப்படி வார்த்தைகளை உச்சரிப்பது என்பதைக் கூட தெரிந்துகொள்ளலாம். இதை தினம் ஒரு வார்த்தை என்ற ரீதியில் கூட படிக்கலாம்.
4. தேர்வு நேரத்தில் பரபரப்பாக இருக்கும். சில பாடங்களைப் படித்திருப்போம்... சில பாடங்களைப் படிக்காமலும் விட்டிருப்போம். கடைசி நேரத்தில் எதை படிப்பது, எதை விடுவது எனக் குழப்பமாக இருக்கும். இதைத் தவிர்க்க, நீங்கள் படிக்காமல் விட்டிருக்கும் பாடங்கள், படித்திருக்கும் பாடங்களைப் போட்டு, உங்களுக்கு எவ்வளவு நாள் தேர்வுக்கு உள்ளது ஆகியவற்றைச் சரியாக உள்ளிட்டு, நீங்கள் படிப்பதற்கான டைம்டேபிளைப் பெறலாம்.

5. இந்தக் கேள்வி - விடை மிகவும் பெரிதாக இருக்கிறது... இதைப் படிக்க கஷ்டமாக இருக்கிறது... என்று நீங்கள் ஃபீல் செய்தால், அந்தக் கேள்வி - விடையின் போட்டோ எடுத்து, அதை ஏ.ஐ ஆப்பில் அப்லோட் செய்யுங்கள். ஏ.ஐ ஆப் அதை எளிதாக்கியும், சின்ன சின்ன தலைப்புகளுடன் உங்களுக்கு ஈசியாக்கி கொடுக்கும்.
6. பாடங்களில் வரும் பெயர்கள், ஆண்டுகள் ஆகியவற்றை நினைவில் வைக்க கஷ்டமாக இருக்கிறதா, அதை ஏ.ஐ-யிடம் கேட்டால் கவிதை வடிவிலோ, நகைச்சுவை வடிவிலோ கொடுக்கும்.
7. சில டாப்பிக்குகள் புரியவில்லை என்றால், ஏ.ஐ ஆப்பில் அதற்கான ஃப்ளோ சார்ட், வரைப்படம், மைண்ட் மேப் ஆகியவற்றைப் போட்டு படிக்கலாம்.
8. கணிதம், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி ஆகியவற்றில் வரும் கணக்குகள் கஷ்டமாக இருந்தால், ஸ்டெப் பை ஸ்டெப்பாக, ட்ரிக்ஸ்களுடன் எளிதாகக் கற்றுக்கொள்ளலாம்.
9. கட்டுரை போன்றவை எழுத கஷ்டமாக இருந்தால், ஏ.ஐ உதவியை நாடலாம்.
10. வேறு எதாவது மொழியைக் கற்க ஏ.ஐ-யைப் பயன்படுத்தலாம்.
11. பள்ளி, கல்லூரியில் நடத்தப்படும் போட்டிகளில் ஜொலிக்கவும், ஏ.ஐ-யிடம் டிப்ஸ் அன்ட் டிரிக்ஸ்களை வாங்கலாம்.

12. கல்லூரிகளில் செமினார் எடுக்க சொன்னார்கள் என்றால் பயப்பட வேண்டாம். அதற்கும் ஏ.ஐ இருக்கிறது. நீங்கள் தலைப்பை மட்டும் போட்டுவிட்டால் போதும், அத்தனை பாயிண்ட்ஸையும் அள்ளித் தெளித்துவிடும்.
13. அறிவியலில் எதாவது புதியதாகச் செய்ய வேண்டும் என்று துடிப்போடு இருப்பவர்களா நீங்கள்? உங்கள் ஐடியாவை ஏ.ஐ-யில் தட்டிவிட்டால் போது, உங்களுக்கான வழிகாட்டுதல்கள் கிடைத்துவிடும்.
மேலே, கூறியிருப்பதைத் தாண்டியும், ஏ.ஐகளைப் பயன்படுத்த முடியும். உங்கள் வேலையை எளிதாக்கலாம்.
ஆனால், முழுக்க முழுக்க ஏ.ஐ-யை மட்டுமே நம்பியிருப்பது தவறு!