செய்திகள் :

கைவிடப்பட்ட தீவை ஆடம்பர டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாற்றிய சாஃப்ட்வேர் இன்ஜினீயர் - எப்படி தெரியுமா?

post image

ஒருகாலத்தில் வெறிச்சோடி காணப்பட்ட, நெப்போலியன் கால கோட்டையால் மட்டுமே அறியப்பட்ட தோர்ன் தீவு (Thorne Island), இன்று தனியார் ஆடம்பர கொண்டாட்டத் தலமாக மாறியுள்ளது. முன்னாள் சாப்ட்வேர் இன்ஜினீயர் மைக் கானர் என்பவர் தான் இப்படி கொண்டாட்டத் தலமாக தோர்ன் தீவு மாறியதற்கு காரணமாக உள்ளார்.

2017-ஆம் ஆண்டு, யூடியூப்பில் அந்த கைவிடப்பட்ட தீவை மைக் பார்த்துள்ளார். அப்போது அங்கு பாழடைந்த கோட்டை தவிர வேறு எதுவும் இல்லையாம்.

அதன்பின்னர் அவர் அந்த தீவை சுமார் £55,500 (₹6.53 கோடி) க்கு வாங்கியிருக்கிறார். இந்த தீவை தனிப்பட்ட தேவைக்காக வைத்துக் கொள்ளாமல், அதை முற்றிலும் புதுப்பித்து ஆடம்பரத் தலமாக மாற்றத் தீர்மானித்தார்.

மொத்தம் £2 மில்லியன் (₹23.52 கோடி) முதலீடு செய்து, ஐந்து ஆண்டுக்கால கடின உழைப்பின் மூலம் பாழடைந்த கோட்டையை ஆடம்பர வசதிகளுடன் கூடிய தனியார் தீவாக மாற்றினார். இன்று, அந்தத் தீவு ஒரே நேரத்தில் 800 பேர் வரை தங்கக்கூடிய இடமாக மாறியுள்ளது.

இங்கே பெரிய சமையலறை, ஸ்டைலிஷ் லவுஞ், விசாலமான ஹால்கள், பல நவீன குளியலறைகள், ஐந்து ஆடம்பர படுக்கையறைகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

இந்தத் தீவிற்கு பொதுப் போக்குவரத்து வசதி இல்லாததால், பொருட்களை கொண்டு செல்ல 350 ஹெலிகாப்டர் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டது. விருந்தினர்கள் கூட படகு அல்லது ஹெலிகாப்டரில் மட்டுமே வர முடியும்.

தற்போது, தோர்ன் தீவு மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது. விலை £3 மில்லியன் (₹35.25 கோடி) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Nude Cruise Trend: பிரபலமாகும் அடையில்லா கப்பல் பயணம்; ஆர்வம் காட்டும் பயணிகள்; என்ன காரணம்?

அமெரிக்காவைச் சேர்ந்த ’பேர் நெசசிட்டீஸ்’ (Bare Necessities) என்ற நிறுவனம், பயணிகள் உடை அணியாமல் (Nude Cruise) செல்லும், கப்பல் பயணங்களை ஏற்பாடு செய்து வருகிறது.இந்தப் பயணங்களின் நோக்கம், பயணிகள் தங்கள... மேலும் பார்க்க

பயணத்தின் நடுவில் ஒரு திடீர் முடிவு - பிரிதலின் வலியை உணர்த்திய லடாக் |திசையெல்லாம் பனி - 11

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

தேனி: குடும்பத்துடன் விடுமுறை நாட்களை கழிக்க சூப்பர் மலை வாசஸ்தலம் - போடிமெட்டு செல்ல தயாரா?

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள போடிமெட்டு, ஏலக்காய் விளைவிக்கப்படுவதற்கு பெயர் பெற்ற ஒரு முக்கியமான இடமாகத் திகழ்கிறது. பூப்பாறையிலிருந்து 10 கி.மீ தொலைவில், தேசிய நெடுஞ்சாலை 85-ஐ ஒட்டி, போடிநாயக்கனூரை ... மேலும் பார்க்க

Train Ticket: நாளை முதல் தீபாவளி ரயில் டிக்கெட் புக்கிங் தொடக்கம் மக்களே.!

தீபாவளி வந்துடுச்சு. என்ன அதுக்குள்ளேயுமா? என்று ஷாக் ஆகிவிடாதீர்கள். நாளை முதல் தீபாவளி ரயில் டிக்கெட் புக்கிங் தொடங்கப்போகிறது. இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 20-ம் தேதி வர உள்ளது. அதுவும் திங்கட்கிழமை... மேலும் பார்க்க

பாம்பன் தூக்கு பாலத்தில் பழுது; பாதியில் நிறுத்தப்பட்ட ரயில்கள், பரிதவித்த பயணிகள்

நாட்டின் நிலப்பரப்பை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் வகையில் 111 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டது பாம்பன் ரயில் பாலம். இந்த பாலத்தின் ஊடாக கப்பல்கள் செல்லும் வகையில் திறந்து மூட கூடிய வகை... மேலும் பார்க்க

லாவோஸ்: ஒரு நாளைக்கு ரூ.1,414 இருந்தால்போதும் இன்டர்நேஷனல் ட்ரிப் செல்லலாம்- சூப்பர் பட்ஜெட் ஸ்பாட்!

இந்திய பயணிகளுக்கு சுற்றுலா செல்ல மலிவான வெளிநாட்டு இடங்களாக தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா மற்றும் இந்தோனேசியா ஆகியவைக் கருதப்படுகின்றன. சமீபத்திய அறிக்கைகளின்படி, லாவோஸ் மிகவும் மலிவான பயண இடமாக உ... மேலும் பார்க்க