செய்திகள் :

ATM மோசடி: ‘கேன்சல்’ பட்டனை இருமுறை அழுத்தினால் பாதுகாப்பா? - உண்மை என்ன?

post image

வங்கி சேவைகளை எளிதாக்கும் ஏடிஎம் இயந்திரங்கள் இன்று அனைவரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டன. ஆனால், இதே ATM களை குறிவைத்து பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. தினசரி பல ஏடிஎம் மோசடி சம்பவங்கள் நடக்கின்றன.

சமீபத்தில் சமூக வலைதளங்களில், ஏடிஎமில் பணம் எடுத்த பிறகு ‘கேன்சல்’ பட்டனை இருமுறை அழுத்தினால் PIN மோசடி தடுக்கப்படும் என்ற தகவல் பரவலாக வைரலானது. இதை பலரும் நம்பி பின்பற்றத் தொடங்கினர்.

RBIயின் பெயரில் போலி தகவல்

இந்த தகவலை Reserve Bank of India (RBI) அறிவித்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால், PIB Fact Check அதனை மறுத்து, “RBI இதுபோன்ற அறிவுரையை எதுவும் வழங்கவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளது.

ATM

ஏடிஎமில் உள்ள கேன்சல் பட்டன் பரிவர்த்தனையை ரத்து செய்வதற்கே பயன்படும், அது PIN திருட்டைத் தடுப்பதோ, ஹாக்கிங் அல்லது ஸ்கிம்மிங் மோசடிகளை தடுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

2 மாதங்களுக்கு முன்பே இது குறித்து விளக்கப்பட்டிருந்தாலும் சிலர் அந்த போலி தகவல்களை பின்பற்றி வருகின்றனர்.

பாதுகாப்பு வழிமுறைகள் என்ன?

ஏடிஎம் மோசடிகளைத் தவிர்க்க வங்கிகளும் நிபுணர்களும் பரிந்துரைக்கும் சில பாதுகாப்பு நடைமுறைகள் இதோ,

ஏடிஎம்-க்கு செல்லும் முன் இயந்திரத்தில் சந்தேகத்திற்கிடமான சாதனங்கள் உள்ளனவா என்று பாருங்கள். ஏதாவது வித்தியசமாக இருந்தால் அந்த ATM-ஐ பயன்படுத்த வேண்டாம், உடனே வங்கிக்கு தகவல் தெரிவிக்கவும்.

ATM பரிவர்த்தனைகளுக்கான SMS, மின்னஞ்சல் அலர்ட்களை எப்போதும் கவனத்தில் கொள்ளுங்கள். சந்தேகமான பரிவர்த்தனை தெரிந்தவுடன் உடனடியாக வங்கியை தொடர்பு கொள்ளுங்கள்.

கார்டு தொலைந்தால் அல்லது திருடப்பட்டால், உடனடியாக மொபைல் வங்கி அல்லது வாடிக்கையாளர் சேவை மூலம் கார்டை ‘block’ செய்யவும்.

ஒவ்வொரு 3–6 மாதத்துக்கும் உங்கள் ATM PIN-ஐ மாற்றவும். பிறந்த தேதி, 1234, 1111 போன்ற எளிதில் கணிக்கக்கூடிய எண்களை தவிர்க்கவும்.

ATM பயன்படுத்தும் போது கவனமாக இருந்தால் மட்டுமே மோசடிகளைத் தடுக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்: ``ரூ2000 கோடி வங்கி மோசடி'' - அனில் அம்பானி மீது வழக்கு தொடர்ந்த சிபிஐ

மோசடி புகார்ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்.காம்) மற்றும் அதன் விளம்பரதாரர் இயக்குனர் அனில் அம்பானி மீது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) ரூ2000 கோடிக்கு மேல் இழப்பை ஏற்படுத்தியதாக வங்கி மோசடி புகார் அள... மேலும் பார்க்க

``இன்று 100 கோடீஸ்வரர்கள்; அடுத்து, 1000 கோடீஸ்வர்கள்'' - கோவை கண்ணன் டார்கெட்!

''மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் 100 கோடீஸ்வரர்களை உருவாக்குவேன்" என்று கடந்த 2016-ஆம் ஆண்டில் நாணயம் விகடனுக்கு பேட்டி அளித்திருந்தார் கோவையைச் சேர்ந்த மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் கண்ணன். அ... மேலும் பார்க்க

பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டை விட, மக்கள் தங்கம், ரியல் எஸ்டேட்டை நம்புவது ஏன்? என்ன காரணம்?

என்ன தான் மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை போன்ற முதலீடு ஆப்ஷன்கள் இருந்தாலும், இன்னும் நம் மக்கள் தங்கம், ரியல் எஸ்டேட்டில் முதலீடுகளைச் செய்து வருகின்றனர். அதற்கு காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்... மேலும் பார்க்க

குளித்தலை: வீடு புகுந்து ஆயுதங்களால் தாக்கி பணம், நகை கொள்ளை; பள்ளி தாளாளர் வீட்டில் பயங்கரம்

பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்த கொள்ளையர்கள்கரூர் மாவட்டம், குளித்தலை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர், ஓய்வு பெற்ற அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் கருணாநிதி, இவரது மனைவி சாவித்திரி. கருணாநிதி குளித்தலை... மேலும் பார்க்க

மும்பை: ஆன்லைனில் ஒரு லிட்டர் பால் ஆர்டர் செய்த மூதாட்டி; ரூ.18 லட்சத்தை இழந்த `அதிர்ச்சி' சம்பவம்!

மும்பையில் பால் ஆர்டர் செய்ய முயன்ற மூதாட்டி ஒருவர் 18.5 லட்ச ரூபாயை இழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.மும்பை வாடாலா பகுதியைச் சேர்ந்த 71 வயது மூதாட்டி ஒருவர் ஆன்லைன் டெலிவரி ஆப் ஒன்றில... மேலும் பார்க்க

`தொழிலதிபரிடம் ரூ.75 கோடி மோசடி' - நடிகை ஷில்பா ஷெட்டி மீது FIR பதிவு செய்த காவல்துறை

நடிகை ஷில்பா ஷெட்டி - அவரின் கணவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தன் கணவர் ராஜ் குந்த்ராவுடன் மும்பையில் வாழ்ந்து வருகிறார். தீபக் கோத்தாரி என்ற தொழிலதிபர... மேலும் பார்க்க