செய்திகள் :

விகடன் எனக்கு மட்டும் தெரிந்த காதலி! - நெகிழும் இளம் எழுத்தாளர் | #நானும்விகடனும்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

மாதம் ஒருமுறையாவது விகடனை வாங்கி படித்து விட வேண்டும் என்ற ஏக்கம் பொருளாதார ரீதியாக கடினமான காலங்களில் கூட இருந்தது ஆனால் என்னால் வாங்கி படிக்க முடியவில்லை. என் வீடு அருகில் பழைய இரும்பு கடை உண்டு அங்கு சென்று முந்தைய ஆண்டு விகடன் புத்தகங்கள் கையில் அள்ளிக்கொண்டு பொறுமையாக இருந்து படித்த காலங்கள் எல்லாம் உண்டு.டீக்கடை பென்ச்களிலும் நூலகத்தின் மேசைகளிலும் சிதறி கிடக்கும் விகடன் புத்தகத்தை யாருக்கும் தெரியாமல் திருடிய காலமெல்லாம்  வெளியில் சொன்னால் வெட்கக்கேடு..

எனது காலை காபிக்கு விகடனின் பக்கங்கள் தான் நொறுக்கு தீணீயாக இருக்கும். சம்பாதிக்க ஆரம்பித்த முதல் சில ஆண்டுகள் விகடன் புத்தகம் மாதம் ஒரு முறையாவது வாங்கி விடவேண்டும் என்பது ஒரு கனவாகவே இருந்தது.

இப்போது நல்ல நிலைமைக்கு வந்த பிறகு மாதம் ஒரு முறையாவது விகடனில் வாசகராக வேண்டும் என்பதை விட விகடன் படைப்பாளனாக வேண்டும் என்பதற்காகவே அதிகம் படிக்க வேண்டிய கட்டாயம். விகடன் என்பது எல்லா சந்தாதாரர்களும் வாசகர்களாக மட்டுமே பார்க்கப்படுகிறார்கள் ஆனால் சிலர் மட்டுமே அதில் வாழும் கதாபாத்திரமாக படைப்பாளனாக, எழுத்தாளராக பார்க்கப்படுகிறார்கள். நான் பேனா பிடித்த காலத்தில் எனக்கு முதலில் பரிந்துரை செய்யப் பட்ட புத்தகம் விகடன் தான்.. விகடனில் எனக்கு ஒரு பக்கம் ஒதுக்க மாட்டார்களா ?

விகடனில் ஏதேனும் ஒரு மூலையில் என்னுடைய பெயர் இடம் பெற்று விடாத என்று ஏக்கத்துடன் பல காகிதங்களில் புரட்டிய நாளும் உண்டு.பலமுறை விகடனுக்கு நான் கவிதை எழுதி அனுப்பி உள்ளேன் ஆனால் ஒரு முறை கூட வெளி வந்ததில்லை. விகடனில் எழுத எனக்கு இன்னும் தகுதிகள் வரவில்லை  என்று ஒரு கட்டத்தில் அதை  விட்டுவிட்டேன்.

விகடனில் எழுதும் எல்லா படைப்பாளர்களும் எழுத்தில் பழுத்த பழமாகவே இருந்தார்கள். நானோ ஒரு பிஞ்சி காய் எப்படி என்னுடைய பதிவு எல்லாம் வரும் என நினைக்கும் பொழுது என்னுடைய முதல் பதிவு வெளியானது அப்போதுதான் புரிந்து கொண்டேன் பழுத்த பழமோ பிஞ்சு காயோ?

உன் கருத்து என்ன சொல்கிறது என்பது மட்டுமே விகடனில் பங்கு பெற போதுமானது. விகடனில் வெளியான என்னுடைய முதல் பதிவை கொண்டு குறைந்தது அந்த நாளில் 100  பேரிடமாவது சொல்லி பெருமைப்பட்டு இருப்பேன்.

அவர்களைப் பொறுத்தவரை அது வெறும் பதிவு மட்டுமே ஆனால் என்னை பொருத்தவரை என் எழுத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக  கருதினேன்.

நான் எழுதிய கவிதைகளோ கட்டுரைகளோ விகடனில் வந்தால் நானும் ஒரு எழுத்தாளர் என தலைக்கனம் கூடிவிடும் அளவிற்கு பெருமைப்பட்டுக் கொண்டிருந்தேன்.. விகடனில் எனக்குப் பிடித்த விஷயமே விகடனில் ஒரு வார்த்தை கூட வீணான வார்த்தை இல்லை என்பது தான் அவ்வளவு எளிமையான நேர்த்தியான அளவுக்கு வார்த்தைகளை கையாண்டு உள்ளார்கள்..

கருத்துக்களில் மறைமுகம் இல்லை மக்கள் மனதில் எப்படி திணிக்க வேண்டும் என்பதை அழகான முறையில் கைதேர்ந்து வைத்துள்ளார்கள் விகடன் குழுவினர்கள் அதனால் தான் என்னவோ 100 ஆண்டுகள் கழிந்தும் விகடன் பல குடும்பங்களுக்கு உறுப்பினராகவே இருக்கிறது.

இங்கு பேனா தூக்கும் பலருக்கு விகடனில் வாசகர்களாக இருப்பதைவிட படைப்பாளராக இருக்க விரும்புகிறார்கள் நானும் அப்படியே விரும்புகிறேன்... விகடன் எனது குடும்ப உறுப்பினர்கானது இல்லை. விகடன் எனக்கு மட்டும் தெரிந்த காதலி. அவள் வாய் வழியே எனது எழுத்து உச்சரிப்பதே வரம்...

நானும் அவளும் போல..

நானும் விகடனும்...

ரசூல் முகைதீன் அப்பாஸ்

கன்னியாகுமரி மாவட்டம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

எனக்கு எல்லாமே ‘இளையராஜா’ தான்! - தனிமை தீயை அணைத்த இசை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஒருவர் கூறுவதை பொறுமையாக கேட்க முடியாமல் போனது ஏன்? - மறந்துபோன பண்புகள் - 3

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சென்னையின் சூழலும் இங்குள்ள மக்களின் மனிதாபிமானமும்! - வாழ்வைக் காட்டிய ஊர் #ChennaiDays

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சினிமாவும் சாப்பாடும் தான் இங்கு பிரதானம்! - சென்னையின் பொன்னான நினைவலை #ChennaiDays

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி : 1950களில் என் மெட்ராஸ் வாழ்க்கை| #Chennaidays

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

தனக்கு கீழ் வேலை செய்கின்ற ஒருவரின் சிறந்த யோசனையை ஏற்க மறுப்பது ஏன்? - மறந்துபோன பண்புகள் - 2