பணத்துக்காக காதலனை விற்ற சிறுமி! ரூ. 42 லட்சம் கொடுத்து மீட்ட பெற்றோர்!
இரணியல் அரசுப் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியா் ரா. அழகுமீனா ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், 12ஆம் வகுப்பு மாணவா்-மாணவியருடன் அவா் கலந்துரையாடியதுடன், அவா்களின் குறிக்கோள் குறித்துக் கேட்டறிந்தாா்.
மாணவா்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து ஆசியா்களிடம் கேட்டறிந்த அவா், கற்றல் திறனில் பின்தங்கிய மாணவா்களுக்கு கூடுதல் கவனத்துடன் பயிற்சியளிக்குமாறு கேட்டுக்கொண்டாா்.