செய்திகள் :

கோவை: ``மது, பாலியல் சீண்டலில் அரசு பள்ளி ஆசிரியர்கள்" - நயினார் நாகேந்திரனின் குற்றச்சாட்டு

post image

கோவையின் கிணத்துக்கடவு அரசு பள்ளியில் ஆசிரியர்களு மது அருந்தி வருவதாகவும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``அரசுப் பள்ளி மாணவிகளின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தும் அறிவாலய அரசு! கோவை கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் குடித்துவிட்டு வருவதோடு, தவறான முறையில் சீண்டி பாலியல் ரீதியாக அத்துமீறுவதாக மாணவிகள் குற்றஞ்சாட்டி காணொளி வெளியிட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

பள்ளியில் புகார் அளித்தால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததோடு, செய்முறைத் தேர்வு மதிப்பெண்ணையும் குறைத்துவிடுவர் என்று மாணவிகள் காணொளியில் பேசுவது அரசுப் பள்ளிகளில் பாலியல் புகார்கள் எப்படி கையாளப்படுகின்றன என்பதைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

வேலியே பயிரை மேய்ந்தது போல அரசுப் பள்ளி ஆசிரியர்களே மாணவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறும் சம்பவம் திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருவது ஏன்? மாணவிகள் தைரியமாக புகார் அளிக்கக் கூட திராவிட மாடல் ஆட்சியில் இடமில்லையா?

ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் கல்வி தரமாக இருக்காது என்ற தவறான எண்ணம் பொதுப்புத்தியில் இருக்கையில், தற்போது மாணவிகளுக்கு பாதுகாப்பும் இருக்காது என்று கருத்து உருவாகிவிடாதா? அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளின் பாதுகாப்பைக் கைகழுவுவது தான் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலமா?

'அப்பா' என்ற பட்டத்தை உரிமை கொண்டாடும் முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள், மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பாரா? மேலும், தக்க விசாரணை நடத்தி கிணத்துக்கடவு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நீதி பெற்றுத் தரவேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

DMDK: 2026-ல் 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு' - பிரேமலதா தலைமையில் தேர்தலுக்கு தயாராகும் தேமுதிக!

2026ம் ஆண்டு தேர்தல் வரவிருக்கும் நிலையில் கட்சிகள் தங்கள் கட்டமைப்பை புனரமைக்கவும் வலுப்படுத்தவும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் தங்களது கட்சியின் மாநில மாநாட்டை அறிவித்துள்ளது தேமுதிக. கே... மேலும் பார்க்க

TVK: "விஜய், விஜயகாந்த் இடத்தை பூர்த்தி செய்வார்..." - தாடி பாலாஜி பேசியது என்ன?

இன்று மறைந்த நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்த் பிறந்தநாள். அவருக்கு பல்வேறு தலைவர்கள் அரசியல், சமூக ஆளுமைகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஆதரவாளரான தாடி... மேலும் பார்க்க

`விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன் தான்' - 5 முறை எம்.பி அனுராக் தாக்கூர் பேச்சு

விண்வெளிக்கு முதலில் யார் சென்றது என்பது குறித்து பாஜக எம்.பி அனுராக் தாகூர் பேசியிருப்பது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இமாசல பிரதேசத்தில் உள்ள பி.எம் ஶ்ரீ பள்... மேலும் பார்க்க

``பாஜகவினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிறது'' - அனுராக் தாக்கூர் குறித்து சு.வெங்கடேசன்

தேசிய விண்வெளி தினத்தன்று இமாச்சலப் பிரதேசத்தின் உனாவில் உள்ள ஸ்ரீ ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் மாணவர்களுடன் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் உரையாற்றி இருக்கிறார்.அப்போது, 'விண்வெளிக்குச் சென்ற முதல் நபர்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டம்: முதல்வர் ஸ்டாலினின் நிலைபாடு என்ன? - அமைச்சர் விளக்கம்!

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன எடுக்க கடும் எதிர்ப்பு இருக்கிறது. இதற்குமுன்பே ஹைட்ரோ கார்பன் எடுப்பது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடந்தது. இந்த நிலையில், தற்போது இராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ... மேலும் பார்க்க

``ரஷ்யாவை வழிக்கு கொண்டுவர இந்தியாவுக்கு வரி'' - அமெரிக்க துணை அதிபர் சொல்வது என்ன?

இந்தியாவிற்கு 50 சதவிகித வரி விதித்தது குறித்து நேர்காணலில் பேசியுள்ளார் அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ். ஜே.டி.வான்ஸ் பேசியது என்ன? நேர்காணலில் பேசிய ஜே.டி.வான்ஸ், "உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும்... மேலும் பார்க்க