செய்திகள் :

TVK: "விஜய், விஜயகாந்த் இடத்தை பூர்த்தி செய்வார்..." - தாடி பாலாஜி பேசியது என்ன?

post image

இன்று மறைந்த நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்த் பிறந்தநாள். அவருக்கு பல்வேறு தலைவர்கள் அரசியல், சமூக ஆளுமைகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஆதரவாளரான தாடி பாலாஜி, விஜயகாந்த் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.

Vijayakanth | விஜயகாந்த்
Vijayakanth | விஜயகாந்த்

அப்போது, "ஒரு சிறந்த தலைவரின் பிறந்தநாள் இன்று. அவர் இறந்தாலும் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் என நான் நினைக்கிறேன்." என்றார்.

விஜயகாந்துக்கு கட்சி, வாரிசுகள் இருக்கும்போது விஜய்யின் தொண்டர்கள் அவரது பெயரை பயன்படுத்தி அரசியல் செய்யலாமா எனப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "செந்தூரப்பாண்டியில் விஜயகாந்த் தான் அவருக்கு (விஜய்) வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தார். விஜய்யின் அப்பாவும் இதைப் பேசியிருக்கிறார். விஜயகாந்தை அவர் அண்ணன் என அழைக்கிறார். விஜயகாந்த் குறித்து விஜய் பேசியதில் எந்த தவறும் இல்லை.

தாடி பாலாஜி

மேலும், விஜய் விஜயகாந்தை முன்னிறுத்தி அரசியல் செய்வதாக எனக்குத் தெரியவில்லை." என்றார்.

விஜயகாந்த் இடத்தை விஜய் நிறப்புவாரா என்ற கேள்விக்கு, "மக்கள் மனது வைத்தால் விஜயகாந்த் இடத்தை விஜய் பூர்த்தி செய்வார்." எனப் பதிலளித்தார்.

DMDK: 2026-ல் 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு' - பிரேமலதா தலைமையில் தேர்தலுக்கு தயாராகும் தேமுதிக!

2026ம் ஆண்டு தேர்தல் வரவிருக்கும் நிலையில் கட்சிகள் தங்கள் கட்டமைப்பை புனரமைக்கவும் வலுப்படுத்தவும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் தங்களது கட்சியின் மாநில மாநாட்டை அறிவித்துள்ளது தேமுதிக. கே... மேலும் பார்க்க

கோவை: ``மது, பாலியல் சீண்டலில் அரசு பள்ளி ஆசிரியர்கள்" - நயினார் நாகேந்திரனின் குற்றச்சாட்டு

கோவையின் கிணத்துக்கடவு அரசு பள்ளியில் ஆசிரியர்களு மது அருந்தி வருவதாகவும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அ... மேலும் பார்க்க

`விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன் தான்' - 5 முறை எம்.பி அனுராக் தாக்கூர் பேச்சு

விண்வெளிக்கு முதலில் யார் சென்றது என்பது குறித்து பாஜக எம்.பி அனுராக் தாகூர் பேசியிருப்பது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இமாசல பிரதேசத்தில் உள்ள பி.எம் ஶ்ரீ பள்... மேலும் பார்க்க

``பாஜகவினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிறது'' - அனுராக் தாக்கூர் குறித்து சு.வெங்கடேசன்

தேசிய விண்வெளி தினத்தன்று இமாச்சலப் பிரதேசத்தின் உனாவில் உள்ள ஸ்ரீ ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் மாணவர்களுடன் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் உரையாற்றி இருக்கிறார்.அப்போது, 'விண்வெளிக்குச் சென்ற முதல் நபர்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டம்: முதல்வர் ஸ்டாலினின் நிலைபாடு என்ன? - அமைச்சர் விளக்கம்!

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன எடுக்க கடும் எதிர்ப்பு இருக்கிறது. இதற்குமுன்பே ஹைட்ரோ கார்பன் எடுப்பது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடந்தது. இந்த நிலையில், தற்போது இராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ... மேலும் பார்க்க

``ரஷ்யாவை வழிக்கு கொண்டுவர இந்தியாவுக்கு வரி'' - அமெரிக்க துணை அதிபர் சொல்வது என்ன?

இந்தியாவிற்கு 50 சதவிகித வரி விதித்தது குறித்து நேர்காணலில் பேசியுள்ளார் அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ். ஜே.டி.வான்ஸ் பேசியது என்ன? நேர்காணலில் பேசிய ஜே.டி.வான்ஸ், "உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும்... மேலும் பார்க்க