வாட்ஸ்ஆப் வழியாக அரசு சேவைகள்: தொடக்கி வைத்தார் மேயர் பிரியா!
``ரஷ்யாவை வழிக்கு கொண்டுவர இந்தியாவுக்கு வரி'' - அமெரிக்க துணை அதிபர் சொல்வது என்ன?
இந்தியாவிற்கு 50 சதவிகித வரி விதித்தது குறித்து நேர்காணலில் பேசியுள்ளார் அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்.
ஜே.டி.வான்ஸ் பேசியது என்ன?
நேர்காணலில் பேசிய ஜே.டி.வான்ஸ், "உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த இந்தியா மீது இரண்டாம் கட்ட வரி விதித்தது உள்பட வலுவான பொருளாதார நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பயன்படுத்திக் கொண்டார்.
இது ரஷ்யாவின் மீது நேரடியாக எந்த வரியும் விதிக்காமல், ரஷ்யாவிற்கு கொடுக்கும் அழுத்தம் ஆகும்.
அமெரிக்கா ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே அமைதியைக் கொண்டுவரும் என உறுதியுடன் நம்புகிறோம்.
கடந்த சில வாரங்களில், இரு பக்கங்களில் இருந்து கவனிக்கத்தக்க மாற்றங்களைப் பார்த்திருக்கிறோம்" என்று பேசியுள்ளார்.

என்ன நடந்தது?
என்ன தான் அமெரிக்கா இந்தியாவின் மீது வரி விதித்தாலும், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இல்லை.
கடந்த வாரம், ரஷ்யாவிற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றிருந்தார்.
அப்போது இந்தியா, ரஷ்யா இரு நாடுகளுமே தங்களது வணிகத்தை நிறுத்தப்போவதில்லை என்று தெரிவித்தன.
இதன் மூலம், கூடுதல் வரி விதிப்பு இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவைக் கெடுக்க முடியாது என்பதைக் காட்டுகிறது.
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...