செய்திகள் :

Sarathkumar: ``இதுகூட தெரியாமல் பேசுகிறீர்களே விஜய்" - TVK விஜய் பேச்சுக்கு நடிகர் சரத்குமார் பதில்

post image

கள்ளக்குறிச்சியில் நடிகர் சரத்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் உரையாற்றிய நடிகர் சரத் குமார், ``நான் உழைப்பால் உயர்ந்தவன். என் 36 ஆண்டுகால சினிமாவில் நீங்கள் கொடுத்ததை மீண்டும் உங்களுக்கே கொடுக்கத்தான் வந்திருக்கிறேன்.

நான் டெல்லியில் பிறந்தவன். எனக்கும் டெல்லிக்கும் தொடர்பிருக்கிறது. அதனால்தான் கலைஞர் என்னை எம்.பியாக அறிவித்து டெல்லி அனுப்பினார்.

இப்போது டெல்லியோடு அரசியல் களத்தில் இணைந்திருக்கிறோம். வரும் சட்டமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானது.

TVK மதுரை மாநாடு - விஜய்
TVK மதுரை மாநாடு - விஜய்

நெல்லையில் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு அமித் ஷா ஜீ தலைமையில் கூட்டம் நடைபெற்றது. பூத் கமிட்டி அமைப்பது அவ்வளவு இலகுவான விஷமல்ல.

நான் தி.மு.கவுக்கு ஆதரவாக இருந்தபோது கடுமையாக உழைத்திருக்கிறேன். அப்போது 24 மணி நேரம் பிரசாரம் செய்யலாம். நான் 22 மணி நேரம் பிரசாரம் செய்திருக்கிறேன்.

இப்போது தி.மு.க சொல்லிக்கொண்டிருக்கும் நாற்பதும் நமதே என்பதை முதன் முதலில் சொன்னவன் நான். அதன்பிறகுதான் எல்லோரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

உலகளவில் இந்தியாவை முன்னோக்கிக் கொண்டுச் செல்வது பிரதமர் மோடி. உலகளவில் இந்தியாவின் பொருளாதாரத்தை 4-வது இடத்துக்கு கொண்டுவந்திருக்கிறார்.

தொலை நோக்குச் சிந்தனையாளர் மோடிஜீ. உலகம் முழுவதும் தமிழை வளர்த்துக்கொண்டிருக்கிறார். உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்காவின் ட்ரம்ப் இந்தியாவை உற்றுநோக்குகிறார்.

அதற்கு காரணம் மோடிஜீ என்றால் பயம். மோடிஜீ அஞ்சுவதுமில்லை இனி அஞ்சப்போவதுமில்லை. விரைவில் நம் தேசம் பொருளாதாரத்தில் முதலிடத்தைப் பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

நடிகர் சரத் குமார்
நடிகர் சரத் குமார்

வெளிப்படையாக, வெற்றிகரமாக ஆட்சி செய்துக்கொண்டிருக்கும் ஒரு பிரதமரை கத்துக்குட்டியான ஒருவர் மிஸ்டர் பிரைமினிஸ்டர் என்று அழைக்கிறார்.

நீங்கள் கொடைநாட்டிலே நடுத்தெருவில் நின்றபோது மிஸஸ் ஜெயலலிதா என அழைத்திருப்பீர்களா? இப்போதும் உங்களால் அப்படி சொல்ல முடியாது.

சிங்கம் என்றால் சிங்கமாகத்தான் இருக்க வேண்டும். சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கும் சிங்கமாக இருக்கக் கூடாது. முதல்வரையும் மாமா என அழைக்கிறார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மரியாதையுடன் அழைக்க வேண்டும். அந்த தரத்தைக் கற்றுக்கொள்ளுங்கள் விஜய்.

நீட் தேர்வால் பயனடைந்தவர்கள் யார்? தகுதியுள்ளவர்கள்தான் மருத்துவராக வேண்டும். குக்கிராமத்தில் இருப்பவர்களும் நீட் தேர்வில் வெற்றிப்பெற்றால் அவர்களும் மருத்துவராகலாம் என்றால், அதை ஏன் வேண்டாம் என்கிறீர்கள்? எனவே நீட் தேவை.

மோடி ஆட்சி காலத்தில் எங்காவது ஒரு மசூதி இடிக்கப்பட்டதா? உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் ராமர் கோயில் கட்டப்பட்டது. மசூதியும் கட்டப்பட்டது.

சரத் குமார்
சரத்குமார்

தேவையில்லாமல் நீங்கள் தான் மதவாதத்தை தூண்டிக்கொண்டிருக்கிறீர்கள். அபுதாபியில் இந்து கோயிலை கட்டியிருக்கிறார்கள் என்றால் அவர் மீது இஸ்லாமியர்கள் நன்றியுடன்தான் இருக்கிறார்கள்.

பிரதமர் மோடியின் 12 ஆண்டு ஆட்சியில் ஒரு மீனவர் கூட உயிரிழக்கவில்லை. தெரிந்துகொண்டு பேசுங்கள் விஜய். கச்சத்தீவை கொடுத்தது கலைஞர். தடுத்தது வாஜ்பாய். இதுகூட தெரியாமல் பேசுகிறீர்களே விஜய். அரசியலில் யாரைப் பற்றி பேசுகிறோம் என்பதை கவனிக்க வேண்டும்.

கச்சத்தீவை மீட்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆணவக் கொலை, போதைப் பொருள் அதிகரிப்பு என தமிழ்நாடு சிக்கியிருக்கிறது." எனப் பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

சென்னை ஐஐடி-க்கு தாரை வார்க்கப்படும் 100 ஏக்கர் விவசாயப் பண்ணை! - ஆரோவில் நகரத்தில் நடப்பது என்ன ?

ஆரோவில் சர்வதேச நகரம்புதுச்சேரியை ஒட்டியிருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது ஆரோவில் சர்வதேச நகரம். ஸ்ரீஅரவிந்த அன்னையின் கனவு பூமியான இந்த சர்வதேச நகரத்தில், உலகின் பல நாடுகளைச் சேர்ந்... மேலும் பார்க்க

``துப்புரவுத் தொழிலாளர்கள் பணி குறித்து பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது'' - திருமாவளவன்

குடியரசு துணைத் தலை​வர் தேர்​தல்தூத்துக்குடியில் வி.சி.க கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ள அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அப்போது செய்தியாளர்... மேலும் பார்க்க

``நிலவில் முதன் முதலில் கால்வைத்தது யார்?" - அனுராக் தாக்கூர் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்

தேசிய விண்வெளி தினத்தன்று இமாச்சலப் பிரதேசத்தின் உனாவில் உள்ள ஸ்ரீ ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் மாணவர்களுடன் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் உரையாற்றினார். அப்போது, ``விண்வெளிக்குச் சென்ற முதல் நபர் யார்"... மேலும் பார்க்க

``சிந்தூர் ஆபரேஷன் அல்ல; உண்மையான போர்'' - பாகிஸ்தான் ட்ரோனை நடுவானில் அழித்த சிவகங்கை கந்தன்

ராணுவ வீரர் கந்தன்சிந்தூர் ஆப்பரேஷனில் பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோனை துல்லியமாக தாக்கி அழித்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் டி.கந்தனுக்கு, புனேயில் நடந்த சுதந்திர தின விழாவில் தங்கப்பதக்கம் வழங்கி அரசு... மேலும் பார்க்க

ரஷ்ய எண்ணெய்: `எங்கு சிறந்த டீல் கிடைக்கிறதோ, அங்கே தான் வாங்க முடியும்' - இந்தியா சொல்லும் நியாயம்

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது தான் இந்தியா - அமெரிக்கா உறவில் தற்போது ஏற்பட்டுள்ள விரிசலுக்கு முக்கிய காரணம். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் சமீபத்திய ரஷ்யா பயணத்தின் போது, இந்தி... மேலும் பார்க்க

மூளையை ஆரோக்கியமாக வைக்கும் 5 விஷயங்கள்!

அளவில் சிறியதாயினும் செயலில் பெரிதானது மூளை. `உலகின் மிகப் பெரிய இயந்திரம் மூளை’ என்றே சொல்லலாம். மூளைதான் மனித உடலின் தலைமைச் செயலகமாகச் செயல்படுகிறது. பேசுவது, சாப்பிடுவது, சிந்திப்பது, தூங்குவது, ம... மேலும் பார்க்க