ரஷ்ய எண்ணெய்: `எங்கு சிறந்த டீல் கிடைக்கிறதோ, அங்கே தான் வாங்க முடியும்' - இந்தியா சொல்லும் நியாயம்
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது தான் இந்தியா - அமெரிக்கா உறவில் தற்போது ஏற்பட்டுள்ள விரிசலுக்கு முக்கிய காரணம்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் சமீபத்திய ரஷ்யா பயணத்தின் போது, இந்தியாவும், ரஷ்யாவும் தங்களது வணிகத்தைத் தொடரும் என்பதை இரு நாடுகளுமே உறுதி செய்தது.
இந்த நிலையில், இதை மீண்டும் வலியுறுத்திள்ளார் ரஷ்யாவின் இந்திய தூதர் வினய் குமார்.

நியாயமற்றது, காரணமற்றது
ரஷ்யா அரசு தொலைக்காட்சி பேட்டியில் இந்திய தூதர் வினய் குமார், "இந்திய நாட்டின் 1.4 பில்லியன் மக்களின் எரிசக்தி தேவையை உறுதி செய்வதே இந்திய அரசின் முக்கிய கொள்கை. ரஷ்யா உடனான வணிகம் என்பது இந்தியா, ரஷ்யாவின் பரஸ்பர நலன்கள் மற்றும் சந்தை காரணிகள் அடிப்படையிலானது தான்.
வணிகம் என்பது வர்த்தக அடிப்படையில் நடப்பதாகும். இந்திய நிறுவனங்களுக்கு எங்கே சிறந்த டீல் கிடைக்கிறதோ, அங்கே தான் எண்ணெயை வாங்குவார்கள். அப்படித்தான் தற்போதைய சூழ்நிலையும் அமைந்துள்ளது.
அமெரிக்காவின் இந்த முடிவு நியாயமற்றது மற்றும் காரணமற்றது ஆகும்.
அமெரிக்கா, ஐரோப்ப நாடுகள் உள்பட பல நாடுகள் இந்தியா உடன் வணிகம் செய்கின்றன.
தேச நலனைக் காப்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து இந்திய அரசு செய்துகொண்டே தான் இருக்கும்" என்று பேசியுள்ளார்.
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...