3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறவிருக்கிறது: ரிசர்வ் வங்கி ஆளுநர்
முத்தையா இயக்கிய சுள்ளான் சேது டீசர் தேதி!
இயக்குநர் முத்தையா மகன் விஜய் நடித்த சுள்ளான் சேது திரைப்படத்தின் டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் கிராம வாழ்க்கையைத் திரைப்படுத்தி கவனம் ஈர்த்த இயக்குநர்களில் ஒருவரான முத்தையா குட்டிப்புலி மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர்.
தொடர்ந்து, கொம்பன், மருது, தேவராட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கினார். இறுதியாக, இவர் இயக்கத்தில் வெளியான விருமன், காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
தற்போது, தன் மகன் விஜய் முத்தையாவை நாயகனாக வைத்து சுள்ளான் சேது என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், நடிகர் பரத் வில்லனாக நடித்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், ஆக்சன் திரைப்படமாக உருவான இப்படத்தின் டீசரை வருகிற ஆக.27 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: அடிபொலி... கல்யாணி பிரியதர்ஷனின் லோகா டிரைலர்!