மோடியின் பட்டப்படிப்பு விவகாரம்: உத்தரவை ரத்து செய்து தில்லி நீதிமன்றம் தீர்ப்ப...
''மம்மூட்டி - மோகன்லாலை சேர்த்து இயக்கும் படத்திற்கு பகத் பாசில் கொடுத்த ஊக்கம்!" - மகேஷ் நாரயணன்
மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் தற்போது மல்லுவுட்டே உற்று நோக்கிக் கொண்டிருக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
ஆம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டி, மோகன்லால் என இருவரை ஒரே படத்திற்குள் சேர்த்திருக்கிறார். அப்படத்திற்கான வேலைகளும் இப்போது நடைபெற்று வருகின்றன.

சமீபத்திய ஒரு நேர்காணலில் மம்மூட்டி - மோகன்லால் நடிக்கும் திரைப்படம் தொடர்பாகவும், ஃபஹத் ஃபாசில் உடனான நட்பு பற்றியும், ஃபார்முலா ரேஸர் நரைன் கார்த்திகேயனின் பயோபிக் திரைப்படம் பற்றியும் பேசியிருக்கிறார்.
மம்மூட்டி - மோகன்லால் நடிக்கும் படத்தின் அப்டேட்டுடன் பேசத் தொடங்கிய அவர், "படப்பிடிப்பு சுமார் 60% முடிந்துவிட்டது. மம்மூட்டி மற்றும் மோகன்லால் என இந்தப் படத்தில் ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டணி உள்ளது.
இப்போது அதைப் பற்றி அதிகமாகப் பேச முடியாது. இது வணிக அம்சங்களுடன் எனது பாணியில் உருவாகும் ஒரு படம். இதற்காக நிறைய உழைப்புக் கொடுத்திருக்கிறேன்.
இது முக்கியமாக நல்ல திரையரங்க அனுபவத்தைத் தரும் படமாக இருக்கும்." என்றவர், "சினிமாவில் என்னுடைய நண்பர்கள் என்னுடைய திரைப்படங்கள் நிகழ்வதற்கு மிகவும் உதவியாக இருந்திருக்கிறார்கள். ஃபஹத் ஃபாசில் ‘சி யு சூன்’ படத்திற்கு ஆதரவளித்தார்.

‘அரியிப்பு’ படத்திற்கு குஞ்சாக்கோ போபன் இருந்தார். தற்போதைய மம்மூட்டி-மோகன்லால் படத்திற்குப் பின்னாலும் இதேபோன்ற ஊக்கம் உள்ளது.
உண்மையில், இந்தக் கதையை மம்மூட்டியிடம் முன்வைக்குமாறு ஃபஹத் ஃபாசில் தான் என்னை ஊக்கப்படுத்தினார். ஒவ்வொரு படத்திலும் நல்ல உறவுகளை உருவாக்குவதில் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
நான் தற்போது முன்னாள் ஃபார்முலா ஒன் வீரர் நரைன் கார்த்திகேயனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் வேலை செய்து வருகிறேன். எழுத்தாளர்-இயக்குநர் ஷாலினியுடன் இணைந்து திரைக்கதை எழுதி வருகிறேன், இது நான் முதல் முறையாக வேறு ஒருவருடன் இணைந்து திரைக்கதை எழுதும் படம்.
தற்போது உருவாகி வரும் படங்களை முடித்த பிறகே புதிய திட்டங்களைப் பரிசீலிக்கவுள்ளேன்." எனக் கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...