சாம்சன் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா.. யாரும் எதிர்பார்க்காத அதிரடி தள்ளுபடியில்!
Malavika Jayaram: "நான் எப்போதும் சினிமாவில் நடிப்பது பற்றி யோசித்ததில்லை" - ஜெயராமின் மகள் மாளவிகா
நீண்ட காலத்திற்குப் பிறகு நடிகர் ஜெயராமும் அவருடைய மகனான காளிதாஸ் ஜெயராமும் இணைந்து நடிக்கிறார்கள். இவர்கள் இருவரும் 2003-ல் வெளியான ஒரு மலையாளத் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள்.
இப்போது இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் 'ஆஷக்கல் ஆயிரம்' படத்தின் பூஜை கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றிருந்தது.

இந்த நிகழ்வில் நடிகர் ஜெயராமின் மகளும், காளிதாஸ் ஜெயராமின் சகோதரியுமான மாளவிகா ஜெயராம், தந்தை, சகோதரரைத் தொடர்ந்து சினிமாவுக்குள் வராதது பற்றிப் பேசியிருக்கிறார்.
அவர் பேசுகையில், "நான் எப்போதும் சினிமாவில் நடிப்பது பற்றி யோசித்ததில்லை. நான் திருமணம் செய்து கொண்டதால் நடிக்கவில்லை என்று கிடையாது. திருமணத்துக்கு முன்பே நான் சினிமாவில் நுழையவில்லை.
அதனால், திருமணத்துக்குப் பிறகும் அப்படி யோசிக்கவில்லை. அப்பாவும் காளிதாஸும் இருவரும் ஒன்றாக நடித்து வருவதால், நானும் அதில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உணர்கிறேன். வீட்டில்கூட அவர்கள் ஒரு சிறந்த காம்போவாகதான் இருக்கிறார்கள்.

இப்போது அவர்களை ஒன்றாகப் பார்க்கும்போதும், அந்தக் காலத்திலிருந்த அதே உணர்வு கிடைக்கிறது. அப்பாவையும் காளிதாஸையும் ஒப்பிட முடியாது.
அவர்கள் இருவரும் வெவ்வேறு ஆளுமைகள், அவர்களின் சினிமா அணுகுமுறையும் மிகவும் வித்தியாசமானது. இந்த இரு தனித்துவமான ஆளுமைகள் ஒன்று சேரும்போது, ஒரு சிறப்பான மாயாஜாலம் நிகழும்" என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...