Vijay Kutty Story: "அந்த 9 திருட்டுப்பயலுகளும் என்ன பண்ணாங்கனா..." - மாநாட்டில் ...
பாஜகவுடன் நேரடிக் கூட்டணியும் மறைமுகக் கூட்டணியும்... யாரைச் சொல்கிறார் விஜய்?
பாஜகவுடன் ஒரு கட்சி நேரடியாகக் கூட்டணி வைத்திருக்கிறது, மற்றொரு கட்சி மறைமுகமாக கூட்டணியில் உள்ளது என்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை விஜய் கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார்.
மதுரை மாவட்டம் பாரபத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.
லட்சக்கணக்கான தொண்டர்கள் இன்று காலை முதலே பாரபத்தியில் மாநில மாநாடு நடைபெறும் திடலுக்கு வந்து கொண்டிருந்தனர். தவெக தொண்டர்களுக்கு தகிக்கும் வெயில் கடும் சவாலாக இருந்த நிலையில், விழா முன்கூட்டியே தொடங்கியது.
பாசிச பாஜகவுடன் தமிழகத்தில் ஒரு கட்சி நேரடியாக கூட்டணி வைத்துள்ளது. மற்றொரு கட்சி மறைமுகமாக. மறைமுகக் கூட்டணிக்குச் செல்ல நாம் என்ன ஊழல் கட்சியா? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
விழாவில் பேசிய விஜய், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலினை விமர்சித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியில் நியாயம் இருக்கிறதா? மக்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா? பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? இயற்கை வளங்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார்.
டாஸ்மாக்கில் மட்டுமே ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகக் கூறுகிறார்கள். பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டால் போதுமா அங்கிள். பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று கதறுவது உங்களுக்குக் கேட்கிறதா? இதில் உங்களை அப்பா என்று சொல்வதாகக் கூறுகிறீர்களே? வாட் இஸ் திஸ் அங்கிள். திஸ் இஸ் வெரி வெரி ராங் அங்கிள், வெரி வெரி ராங் என்று கூறினார். பெண்களுக்கு மட்டுமே, அரசு ஊழியர்களுக்கு, விவசாயிகளுக்கு மீனவர்களுக்கு என பலரையும் ஏமாற்றுகிறீர்கள். வெரி வெரி ஒர்ஸ்ட் அங்கிள்.
ஆட்சியில் இருப்பவர்களை விடுங்கள், ஆட்சியில் இருப்பவர்கள் செய்வோம் செய்வோம் என்று சொன்னதையெல்லாம் செய்தார்களா என்று மக்களிடம் கேட்டார். அவர்கள் சொன்ன பதிலை, மை டியர் அங்கிள், கேட்கிறதா இந்த பதில் என்றும் பேசியிருக்கிறார்.
தவெக கூட்டத்தில்..
இன்று பிற்பகல் 3 மணிக்கே விழா மேடைக்கு தவெக தலைவர் விஜய் வந்தார். முக்கிய தலைவர்கள் உரையாற்றிய நிலையில், விழாவின் முத்தாய்ப்பாக விஜய் பேசத் தொடங்கினார்.
அப்போது, மத்தியில் ஆளும் பாஜகவையும், மாநிலத்தை ஆளும் திமுகவையும் கடுமையாக விமரிசித்துள்ளார் விஜய். கொள்கை எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக என்றும் அறிவித்தார்.
மத்திய அரசை கடுமையாக விமர்சித்த விஜய், எதிர்காலம் வரும் என்ற எம்ஜிஆர் பாடலை பாடி, நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு சில கோரிக்கைகள் வைக்கிறேன் என்று கூறினார். நமது தமிழக மீனவர்கள் 800க்கும் மேற்பட்டவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனை தடுக்க கட்சத் தீவை மீட்டுக் கொடுங்கள். நீட் தேர்வினால் நடக்கும் கொடுமைகளை சொல்ல முடியவில்லை. தயவுகூர்ந்து நீட் தேர்வை ரத்து செய்து விடுங்கள். செய்வீர்களா பிரதமர் அவர்களே என்று கேட்டுள்ளார்.