Shreyas Iyer: 'இந்திய டி20 அணியில் இடம்பெற ஸ்ரேயஸ் வேறு என்ன செய்ய வேண்டும்?' - ...
TVK மதுரை மாநாடு: "தவெக யாருடன் கூட்டணி என்ற கேள்விகள் வரும்; அதற்கு..." - சஸ்பென்ஸ் வைத்த விஜய்
தமிழக அரசியலில் புதிய கட்சியாக கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மாலை 3 மணியளவில் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து மாநாட்டில் உரையாற்றிய விஜய், "1967, 1977-ல் தமிழக அரசியலில் நடந்த மிகப்பெரிய மாற்றத்தை போலவே 2026-ல் ஒரு வரலாறு திரும்பப் போகிறது என்று உறுதியாகச் சொல்வதற்கான மாநாடுதான் இந்த இரண்டாவது மாநில மாநாடு.
இந்தக் குரல் ஒற்றை தமிழ் மகனின் குரல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் குரல். நாம் அரசியலுக்கு வருவதற்கு முன்னாள், `அட இவரெல்லாம் வரமாட்டார், அவரே வரல இவரா வரப் போகிறார்' என்று நிறையப் பேர் ஜோதிடம் சொன்னார்கள்.
அப்புறம் கட்சியின் பெயர் அறிவித்த பிறகு `பெயர் தானே அறிவித்திருக்கிறார். மக்களிடம் பெயர் வாங்க வேண்டுமே அதெல்லாம் முடியாது' என்றார்கள்.
அப்புறம் மாநாடு நடத்தும்போது `அது எவ்வளவு பெரிய விஷயம். புஸ்ஸி வச்சுக்கிட்டு மாநாடு எல்லாம் எப்படி நடத்திக் காட்ட முடியும். அதெல்லாம் அவர்களால் முடியாது' என்றார்கள்.
இப்போது புதுசா, `ஆட்சி பிடிக்கிறது அவ்வளவு ஈசி இல்ல' என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம், `கூட்டம் எல்லாம் ஓகேதான். அது எப்படி ஓட்டாக மாறும்' என்கிறார்கள்.
இந்த அரசியல் ஆய்வாளர்களுக்கு எல்லாம் ஒன்று சொல்கிறேன், இந்த விஜய் இதோ இந்தப் பல லட்சம் பேர் கூடுகிற கூட்டத்தில் மட்டுமே இருக்கிறார் என்று தப்பு கணக்கு போட்டு விடாதீர்கள்.

இந்தக் கூட்டம் நம்மை கோட்டைக்கு அனுப்பக்கூடியதாக இருக்கும். இது அரசியல் ஆதாயத்திற்காகத் தொடங்கப்பட்ட கட்சி அல்ல.
நம்முடைய ஐந்து கொள்கை தலைவர்களின் வழிகாட்டுதலோடு தொடங்கப்பட்ட கட்சி. எங்களுடைய நிலைப்பாட்டில் துளி சமரசத்துக்கும் இடமில்லை.
எங்களின் ஒரே கொள்கை இதுவரை பா.ஜ.க தான். எங்களுடைய ஒரே அரசியல் எதிரி தி.மு.க தான். பாசிச பா.ஜ.க-வுடன் கூட்டணிக்குச் செல்ல நாம் என ஊழல் கட்சியா... நான் இப்போதும் சொல்கிறேன், நம்மை நம்பி வருபவர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் உறுதியாகப் பங்களிப்பு செய்யப்படும்.
உடனே யாருடன் கூட்டணி என்ற கேள்விகள் எல்லாம் வரும். அதற்கெல்லாம் ஒரே பதில், சஸ்பென்சஸிலேயே சஞ்சாரம் செய்யுங்கள். 2026-ல் இரண்டே பேருக்கு மட்டும்தான் போட்டி ஒன்று TVK, இன்னொன்று DMK." என்று கூறினார்.