செய்திகள் :

அம்மா உடன் முதல் விமானப் பயணம்: "நீங்கள் இல்லாமல் நான் இல்லை" - நெகிழ்ந்த விமானி!

post image

ஆந்திராவைச் சேர்ந்த விமானி ஒருவர், பயணிகள் முன்னிலையில் பைலட் ஆக வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற ஆதரவு அளித்ததற்காக தனது தாய்க்கு நன்றி தெரிவித்து பெருமைப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகியிருக்கிறது.

ஜஸ்வந்த் வர்மா என்ற அந்த விமானி பயணிகளிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டு பேசத்தொடங்கினார்.

இண்டிகோ விமானம்

"இன்று எனக்கு மிகவும் சிறப்பான நாள். ஏனென்றால் என்னையும் பைலட் ஆக்கவேண்டும் என்ற என் கனவையும் ஆதரித்த நபர், என் அம்மா, முதல்முறையாக என்னுடன் இங்கே பயணம் செய்கிறார். அவருக்காக ஒரு கைதட்டல் வழங்குங்கள்." எனப் பேசியுள்ளார்.

மேலும், "நாங்கள் திருப்பதிக்கு அருகில் உள்ள மிகச் சிறிய கிராமத்திலிருந்து வருகிறோம். பைலட் ஆகவேண்டும் என்ற சிந்தனை எங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டது. ஆனால் என் அம்மா தான் முன்வந்து என்னுடைய ஒவ்வொரு போராட்டம், தூக்கமில்லாத இரவுகள், நிச்சயமாக கல்விக் கடன் EMI- கட்டுவதிலும் எனக்கு உறுதுணையாக இருந்தார்.

Pilot Jaswanth

அவரால்தான் இங்கே ஒரு கேப்டனாக நின்றுகொண்டிருக்கிறேன், விமானத்தை இயக்குகிறேன், அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுள்ளேன், என் கனவு வாழ்க்கையை வாழ்கிறேன்." என்றார் ஜஸ்வந்த்.

பின்னர் அவர் அம்மாவை நோக்கி, "உங்களிடம் ஒன்றே ஒன்றுதான் சொல்ல வேண்டும், இது எல்லாமும் உங்களால்தான். நீங்கள் இல்லையென்றால் நான், இல்லை" என்றார் உணர்ச்சிவசமாக.

விமானி ஜஸ்வந்த் வர்மாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பலரும் நெகிழ்ச்சியான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

விநாயகர் விசர்ஜனம்: ``மண்சிலைக்கு திரும்பினாதான் எங்க வாழ்க்கையும், பூமியும் நல்லா இருக்கும்''

மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாறு, பட்டு கண்ணம் செஞ்ச மண்ணு அது பொன்னூறு, காது செஞ்ச மண்ணு அது மேலூறு…அடடா இப்பெல்லாம் எங்க மண்ணில் சிலை செய்வாங்க?, இந்த காலத்துல போய் மண்ணை மிதிச்சு ரெடி பண்ணி நாள் கணக்க... மேலும் பார்க்க

Viral Video: ''அவரின் புன்னகை ஒரு மந்திரம்'' - Instagram-ல் வைரலாகும் பாட்டி வீடியோ; பின்னணி என்ன?

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோ, கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை உருக்கியது. அதைப் பகிர்ந்தவர் கான்டென்ட் கிரியேட்டர் சஞ்சிதா அகர்வால். அந்த வீடியோவில், சஞ்சிதா தனது காரை ஓட்டி கொண்டி... மேலும் பார்க்க

``ஹனுமான் வழிபாடு கிடையாது; ராவணன் எங்கள் முன்னோர்'' - மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தின் கதை

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு கிராமமும் தனித்துவமான வரலாற்றையும் கலாச்சாரத்தையும் கொண்டிருக்கும். அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிஸ்ரக் என்ற கிராமத்தில் உள்ள மக்கள் ராவணனை தங்கள் முன்னோராக கரு... மேலும் பார்க்க

``சாப்பாட்டில் ஈ, பூச்சி, முடி இருக்கத்தான் செய்யும்'' -ஷாருக்கான் மனைவி நடத்தும் ஹோட்டலில் விளக்கம்

தூரி ரெஸ்டாரண்ட்பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஐ.பி.எல் கிரிக்கெட் அணியை சொந்தமாக நடத்தி வருகிறார். இது தவிர ரெட்சில்லீஸ் என்ற படத்தயாரிப்பு கம்பெனியையும் நடத்தி வருகிறார். ஷாருக்கான் மனைவி கெளரி கான், தூ... மேலும் பார்க்க

Sachin: ``ஊட்டச்சத்தும் இயக்கமும் முக்கியம்'' - உடற்பயிற்சி நிலையம் தொடங்கிய மகளை வாழ்த்திய சச்சின்

பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் புதிதாக உடற்பயிற்சி நிலையம் தொடங்கியுள்ளார். துபாய்யை மையமாகக் கொண்ட பைலேட்ஸ் அகாடமியின் கிளையை மும்பையில் அந்தேரி பகுதியில் தொடங... மேலும் பார்க்க

Frank Caprio: அமெரிக்காவின் கனிவான நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார்; கடைசியாக சொன்ன செய்தி!

நீதிபதி பிராங்க் கேப்ரியோ சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர். அமெரிக்காவில் உள்ள ரோட் தீவைச் சேர்ந்த இவர் கனிவான விசாரணைக்காக உலகம் முழுவதும் அறியப்படுகிறார். 88 வயதான இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கண... மேலும் பார்க்க