செய்திகள் :

பிரபு தேவா, வடிவேலு படத்தின் பூஜை!

post image

நடிகர்கள் பிரபு தேவா, வடிவேலு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.

நடிகர் பிரபு தேவா இந்தியளவில் அறியப்படும் நடிகர், இயக்குநராக இருந்தாலும் தற்போது தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான பகீரா கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தொடர்ந்து, நடிகர் விஜய்யுடன் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதே நேரம், நடிகர் வடிவேலு மாமன்னன் வெற்றிக்குப் பின் கேங்கர்ஸ் படத்திலும் கவனம் ஈர்த்திருத்திருந்தார். ஃபஹத் ஃபாசிலுடன் மாரீசன் படத்தில் நடித்தும் வரவேற்பைப் பெற்றார்.

இந்த நிலையில், நடிகர்கள் வடிவேலு, பிரபு தேவா இணைந்து நடிக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. இப்படத்தை, சாம் ரோட்ரிக்ஸ் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் சோம்பி (zombie) கதையாக உருவாகவுள்ளது.

இதையும் படிக்க: கிங்டம் ஓடிடி தேதி!

actors prabhu deva, vadivelu's new movie pooja happening today

மீனாட்சி சுந்தரம் தொடர் நிறைவு! இறுதிநாள் படப்பிடிப்பில் அழுத நடிகைகள்!

மீனாட்சி சுந்தரம் தொடர் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், இறுதிநாள் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இதில், நாயகி ஷோபனாவுடன் அவருடன் நடிக்கும் மதுமாவும் கட்டியணைத்து அழுத விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்... மேலும் பார்க்க

கிங்டம் ஓடிடி தேதி!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கிங்டம் திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த திரைப்படம் கிங்டம். ஆக்‌ஷன் கதையாக உருவான இப்படத்... மேலும் பார்க்க

என் காதலன் எனக் கூறினால் ஏமாற வேண்டாம்: சின்ன மருமகள் நடிகை வேண்டுகோள்!

என் காதலன் எனக் கூறி நேர்காணல் அளித்து வருபவரை நம்ப வேண்டாம் என சின்ன திரை நடிகை ஸ்வேதா வேண்டுகோள் விடுத்துள்ளார். அவருக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், என் புகைப்படங்கள், விடியோக்களை ப... மேலும் பார்க்க

காந்தா வெளியீடு ஒத்திவைப்பு?

நடிகர் துல்கர் சல்மான் நடித்த காந்தா திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும், நடிகர் துல்கர் சல்மான், வித... மேலும் பார்க்க