ஹிமாசலில் கனமழை: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
ஹிமாசலில் பெய்து வரும் கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதானல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மொத்தம் 12 மாவட்டங்களில் 4 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட மொத்தம் 484 சாலைகள் மூடப்பட்டுள்ளன. இவற்றில், மண்டி மாவட்டத்தில் 245 சாலைகளும், அருகிலுள்ள குலுவில் 102 சாலைகளும் அடங்கும். பிலாஸ்பூர், ஹமீர்பூர், உனா மற்றும் சோலன் மாவட்டங்களில் குடியிருப்பு நிறுவனங்கள் தவிர, கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே மாநிலத்தின் இரண்டு முதல் ஏழு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் ஆகஸ்ட் 30 வரை கனமழை பெய்யும் என்று உள்ளூர் வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, மாநிலத்தில் மொத்தம் 941 மின் விநியோக மின்மாற்றிகள் மற்றும் 95 நீர் வழங்கல் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
சுதர்சன் ரெட்டி மீதான விமர்சனம்! அமித் ஷாவுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்டனம்!
பருவமழை தொடங்கிய ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 24 வரை, மாநிலத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 155 பேர் பலியாகியுள்ளனர். 37 பேர் காணாமல் போயுள்ளனர் என்று மாநில அவசரகால செயல்பாட்டு மையம் கூறியுள்ளது. இதுவரை 77 திடீர் வெள்ளங்கள், 40 மேக வெடிப்புகள் மற்றும் 79 பெரிய நிலச்சரிவுகளை மாநிலம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை தொடர்பான சம்பவங்களில் ஹிமாச்சலப் பிரதேசம் ரூ.2,348 கோடி அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளது என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.