மறுவெளியீட்டில் கேப்டன் பிரபாகரன் வசூல் எவ்வளவு தெரியுமா?
நடிகர் விஜயகாந்த்தின் கேப்டன் பிரபாகரன் மறுவெளியீட்டு வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஆர். கே. செல்வமணி இயக்கத்தில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991 ஆம் ஆண்டு கேப்டன் பிரபாகரன் வெளியானது.
விஜயகாந்த்தின் 100-ஆவது படமான இது அன்றைய நிலவரப்படி அதிக பொருள்செலவில் எடுக்கப்பட்டு திரையரங்குகளிலேயே 300 நாள்களுக்கு மேல் ஓடிய வெற்றிப்பெற்ற திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில், வில்லனாக மன்சூர் அலிகானும் முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், லிவிங்ஸ்டன், ரூபினி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
34 ஆண்டுகள் கழித்து இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை மறுவெளியீடானது. மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப தரத்தில் வெளியான இப்படத்தை இன்றைய கால இளைஞர்களும் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.
இந்த நிலையில், மறுவெளியீட்டில் முதல் மூன்று நாள்களில் கேப்டன் பிரபாகரன் ரூ. 1.25 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வார இறுதிக்குள் ரூ. 5 கோடி வரை நெருங்கலாம் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: ஏன் விஜய் என்னிடம் துப்பாக்கியைக் கொடுத்தார்? சிவகார்த்திகேயன் விளக்கம்!