என்ன ஊதியம் எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்டால்: பில் கேட்ஸ் சொல்லும் பதில்!
``நிலவில் முதன் முதலில் கால்வைத்தது யார்?" - அனுராக் தாக்கூர் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்
தேசிய விண்வெளி தினத்தன்று இமாச்சலப் பிரதேசத்தின் உனாவில் உள்ள ஸ்ரீ ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் மாணவர்களுடன் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் உரையாற்றினார்.
அப்போது, ``விண்வெளிக்குச் சென்ற முதல் நபர் யார்" எனக் கேள்விகேட்டார்.
மாணவர்கள் ``நீல் ஆம்ஸ்ட்ராங்" என்று பதிலளித்தபோது, அனுராக் தாக்கூர், `` ஆனால், என்னைப் பொறுத்தவரை விண்வெளிக்குச் சென்ற முதல் நபர் ஹனுமான் என நான் நினைக்கிறேன்.
பிரிட்டிஷாரால் நமக்கு வழங்கப்பட்ட பாடப்புத்தகங்களைத் தாண்டி நமது வேதங்கள், நமது கலாச்சாரம், நமது அறிவை நோக்கி அதிகம் படிக்க வேண்டும்" எனப் பேசினார்.
இந்த உரையாடலை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டின் தி.மு.க எம்.பி கனிமொழி தன் எக்ஸ் பக்கத்தில், ``நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஒருவர் பள்ளி மாணவர்களிடம் நிலவில் முதலில் கால் வைத்தது நீல் ஆம்ஸ்ட்ராங் அல்ல, ஹனுமன் எனக் கேட்கிறார். அறிவியல் என்பது கட்டுக்கதை அல்ல.
பள்ளிக்குழந்தைகளை தவறாக வழிநடத்துவது நமது அரசியலமைப்பின் அறிவு, பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மையை அவமதிப்பதாகும். இந்தியாவின் எதிர்காலம் மாணவர்களின் ஆர்வத்தை வளர்ப்பதில்தான் உள்ளது, உண்மையை கட்டுக்கதையுடன் குழப்பிக் கொள்வதில் இல்லை." என்று பதிவிட்டுள்ளார்.