பாஜகவினரின் அறிவு நாளுக்குநாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது: சு. வெங்கடேசன்
விருத்தாசலம் அருகே பூவனூர் தண்டவாளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன் ! 8 மாணவர்கள் காயம்
பூவனூரில் ரயில் தண்டவாளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் 8 மாணவர்கள் காயமடைந்தனர்.
விருத்தாசலம் அருகே பூவனூரில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பள்ளி வேனில் பயணித்த 8 மாணவர்கள் காயமடைந்தனர்.
கோவையில் வனத் துறையினரின் வாகனத்தை தாக்கி கண்ணாடியை உடைத்த காட்டு யானை
அதிவேகத்தில் சென்றபோது பிரேக் பிடிக்காததால் தண்டவாள ஓரத்தில் இருந்த தடுப்பு கம்பியில் மோதி பள்ளி வேன் கவிழ்ந்தது. பொதுமக்கள் விரைந்து சென்று தண்டவாளத்தில் கவிழ்ந்த வேனை தூக்கி அகற்றினர்.
விபத்துக்குள்ளான நேரத்தில் அந்த வழியாக ரயில் ஏதும் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.