செய்திகள் :

ஏன் விஜய் என்னிடம் துப்பாக்கியைக் கொடுத்தார்? சிவகார்த்திகேயன் விளக்கம்!

post image

நடிகர் சிவகார்த்திகேயன் மதராஸி இசைவெளியீட்டு விழாவில் விஜய் குறித்து பேசியுள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள மதராஸியில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். துப்பாக்கியில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால் வில்லனாகவும், ருக்மிணி வசந்த் நாயகியாகவும் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் செப். 5 திரைக்கு வருகிறது.

இப்படத்தின் டிரைலர் நேற்று (ஆக.24) வெளியானது. இதில், வித்யுத் ஜம்வால், ‘துப்பாக்கி யாரிடம் இருந்தாலும் வில்லன் நான்தான்’ எனப் பேசும் வசனம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், மதராஸி டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், “கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் என்னிடம் துப்பாக்கியைக் கொடுத்த காட்சி பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் சிலர் நீ அடுத்த விஜய்யா? குட்டி தளபதியா? எனக் கேட்க ஆரம்பித்தனர்.

எனக்கு அப்படியொரு எண்ணமிருந்தால் விஜய் என்னிடம் துப்பாக்கியைக் கொடுத்திருக்கவும் மாட்டார்; நான் வாங்கியிருக்கவும் மாட்டேன். அண்ணன் அண்ணன்தான், தம்பி தம்பிதான். இது இந்த அளவிலேயே இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: “உன்னைப்போல் பிறரை நேசி!” -மதராஸி டிரைலர் இதோ!

actor sivakarthikeyan spokes about his gun scene with vijay in goat movie

முத்தையா இயக்கிய சுள்ளான் சேது டீசர் தேதி!

இயக்குநர் முத்தையா மகன் விஜய் நடித்த சுள்ளான் சேது திரைப்படத்தின் டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் கிராம வாழ்க்கையைத் திரைப்படுத்தி கவனம் ஈர்த்த இயக்குநர்களில் ஒருவரான முத்தையா குட்டி... மேலும் பார்க்க

அடிபொலி... கல்யாணி பிரியதர்ஷனின் லோகா டிரைலர்!

கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவான லோகா திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் நடிகர்கள் நஸ்லன், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவ... மேலும் பார்க்க

சிறந்த ரைடா்கள், டிபன்டா்கள் உள்ளனா்: தமிழ் தலைவாஸ் பயிற்சியாளா்

பிகேஎல் சீசன் 12-இல் பங்கேற்கும் தமிழ் தலைவாஸ் அணியில் சிறந்த ரைடா்கள், டிபன்டா்கள் உள்ளனா் என அதன் பயிற்சியாளா் சஞ்சீவ் பலியான் தெரிவித்துள்ளாா். புரோ கபடி லீக் சீசன் 12-தொடா் விசாகப்பட்டினத்தில் ஆக... மேலும் பார்க்க

யு 17 கால்பந்து: இந்தியா அபார வெற்றி

யு 17 தெற்காசிய மகளிா் கால்பந்து போட்டியில் இந்திய அணி தொடா் மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. பூடான் தலைநகா் திம்புவில் நடைபெறும் இப்போட்டியில் இந்திய அணி ஏற்கெனவே வங்கதேசம், இலங்கையை வீழ்த்திய... மேலும் பார்க்க

மாண்டொ்ரே ஓபன்: டயனா ஷினைடர் சாம்பியன்!

மாண்டொ்ரே ஓபன் டபிள்யுடிஏ 500 டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் டயானா ஷினைடா் சாம்பியன் பட்டம் வென்றாா். சக வீராங்கனை ஏகடெரினா அலெக்சாண்ட்ரோவாவை 6-3, 4-6, 6-4 என வீழ்த்தினாா் டயனா. மெக்ஸிகோவின் மாண்டொ்ர... மேலும் பார்க்க

ஆசிய துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றாா் ஐஸ்வரி பிரதாப்

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் டோமா் தங்கம் வென்றாா். கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் 16-ஆவது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வரு... மேலும் பார்க்க