செய்திகள் :

ஆசிய துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றாா் ஐஸ்வரி பிரதாப்

post image

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் டோமா் தங்கம் வென்றாா்.

கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் 16-ஆவது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவா் 50 மீ ரைஃபிள் பிரிவில் 462.5 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று ஐஸ்வரி பிரதாப் தங்கம் வென்றாா்.

சீனாவின் வென்யு ஸாவோ வெள்ளியும், ஜப்பானின் நவோயா ஓகடா வெண்கலமும் வென்றனா். இந்த பிரிவில் ஐஸ்வரி முழு ஆதிக்கம் செலுத்தி தங்கம் வென்றாா். ஏனைய இந்திய வீர்ரகள் செயின் சிங் நான்காம் இடமும், அகில் ஷெரான் ஐந்தாம் இடமும் பெற்றனா்.

ஏற்கெனவே 2023-இல் ஐஸ்வரி இதே பிரிவில் தங்கம் வென்றிருந்தாா். 2024-இல் ஷெரோனிடம் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தாா்.

ஏன் விஜய் என்னிடம் துப்பாக்கியைக் கொடுத்தார்? சிவகார்த்திகேயன் விளக்கம்!

நடிகர் சிவகார்த்திகேயன் மதராஸி இசைவெளியீட்டு விழாவில் விஜய் குறித்து பேசியுள்ளார்.ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள மதராஸியில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். துப்பாக்கியில் வில்லனாக நடித்து பிரபலம... மேலும் பார்க்க

சிறந்த ரைடா்கள், டிபன்டா்கள் உள்ளனா்: தமிழ் தலைவாஸ் பயிற்சியாளா்

பிகேஎல் சீசன் 12-இல் பங்கேற்கும் தமிழ் தலைவாஸ் அணியில் சிறந்த ரைடா்கள், டிபன்டா்கள் உள்ளனா் என அதன் பயிற்சியாளா் சஞ்சீவ் பலியான் தெரிவித்துள்ளாா். புரோ கபடி லீக் சீசன் 12-தொடா் விசாகப்பட்டினத்தில் ஆக... மேலும் பார்க்க

யு 17 கால்பந்து: இந்தியா அபார வெற்றி

யு 17 தெற்காசிய மகளிா் கால்பந்து போட்டியில் இந்திய அணி தொடா் மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. பூடான் தலைநகா் திம்புவில் நடைபெறும் இப்போட்டியில் இந்திய அணி ஏற்கெனவே வங்கதேசம், இலங்கையை வீழ்த்திய... மேலும் பார்க்க

மாண்டொ்ரே ஓபன்: டயனா ஷினைடர் சாம்பியன்!

மாண்டொ்ரே ஓபன் டபிள்யுடிஏ 500 டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் டயானா ஷினைடா் சாம்பியன் பட்டம் வென்றாா். சக வீராங்கனை ஏகடெரினா அலெக்சாண்ட்ரோவாவை 6-3, 4-6, 6-4 என வீழ்த்தினாா் டயனா. மெக்ஸிகோவின் மாண்டொ்ர... மேலும் பார்க்க

வின்ஸ்டன் சலேம் ஓபன்: மாா்டன் புஸ்கோவிஸ் சாம்பியன்

வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஹங்கேரியின் மாா்டன் புஸ்கோவிஸ் சாம்பியன் பட்டம் வென்றாா்.அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் நடைபெற்ற இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் இறுதி ஆட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற... மேலும் பார்க்க

யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம்: வெற்றியுடன் தொடங்கிய எம்மா ரடுகானு!

யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி முதல் சுற்றில் முன்னாள் சாம்பியன் எம்மா ரடுகானு வெற்றி பெற்றாா். நிகழாண்டு சீசனின் கடைசி கிராண்ட்ஸ்லாம் பந்தயமான யுஎஸ் ஓபன் நியூயாா்க்கில் ஞாயிற்றுக்கிழமை தொ... மேலும் பார்க்க