மீனாட்சி சுந்தரம் தொடர் நிறைவு! இறுதிநாள் படப்பிடிப்பில் அழுத நடிகைகள்!
' அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனையுடன் கல்வித் துறையை நடத்தி வருகிறோம் '
அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனையுடன் கல்வித் துறையை நடத்தி வருகிறோம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பி.எம். ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜ.க. எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்குர் கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடினார்.
அப்போது அவர், "விண்வெளிக்கு முதலில் பயணம் செய்தவர் யார்?" என கேள்வி எழுப்பினார். அதற்கு மாணவர்கள் ஒருமித்த குரலில் "நீல் ஆம்ஸ்ட்ராங்" எனப் பதிலளித்தனர். ஆனால், அதற்கு பதிலளித்த அனுராக் தாக்குர், "எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமன் தான்" எனத் தெரித்தார்.
பாஜகவினரின் அறிவு நாளுக்குநாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது: சு. வெங்கடேசன்
அவரின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்வினையை ஆற்றி வருகின்றனர். இதுகுறித்து நெல்லையில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில், அவ்வாறு பேசுவது அவரது இஷ்டம். அது குறித்து நான் கருத்து கூற முன்வரவில்லை.
ஆனால் நாங்கள் அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனையோடு தந்தை பெரியார் வழியில் பள்ளிக்கல்வித் துறையை, தமிழக முதல்வர் வழிகாட்டுதலோடு செயல்பட்டு வருகிறது. அறிவைச் சார்ந்து இருக்கும் எங்கள் பாதையில் நாங்கள் செல்லும்போது எங்களோடு பயணிக்க விரும்புபவர்கள் வரலாம் என்றார்.