செய்திகள் :

எக்ஸாம் ரிசல்ட் பெற ‘ஆடுடன்’ வந்த டீனேஜ் மாணவி- என்ன காரணம் தெரியுமா?

post image

இங்கிலாந்தின் லாங்காஷையரில் வசிக்கும் 16 வயது மாணவி மில்லி ஜான்சன், தனது பொதுத் தேர்வு முடிவுகளைப் பெறும்போது தனது ஆட்டையும் உடன் அழைத்து சென்ற வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மற்ற மாணவர்கள் பெற்றோர் அல்லது நண்பர்களுடன் பள்ளிக்கு வந்திருந்தபோது, மில்லி தனது நெருங்கிய நண்பனான ஒரு ஆட்டுடன் வந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

“நார்த் ரொனால்ட்சே” இனத்தைச் சேர்ந்த அந்த ஆட்டிற்கு மில்லி கெவின் என்று பெயர் வைத்துள்ளார். ”கெவின் எனக்கு மிக நெருங்கிய நண்பன். எங்கு சென்றாலும் என்னுடன் வருவான். தேர்வு முடிவுகள் வரும் நாளில் நான் பதட்டமாக இருந்தேன், ஆனால் கெவின் என்னுடன் இருந்ததால் மிகவும் நிம்மதியாக உணர்ந்தேன்” என்று மில்லி கூறியிருக்கிறார்.

கெவின் இதற்கு முன்னதாகவே பள்ளி விழாக்கள், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளதாக மில்லி கூறுகிறார்.

தேர்வில் மில்லி நல்ல மதிப்பெண்களைப் பெற்றதோடு, விலங்கு மருத்துவ நிலையத்தில் நர்ஸ் பயிற்சிக்கான அழைப்பையும் பெற்றிருக்கிறார்.

மேலும், மில்லியும் கெவினும் இணைந்து நவம்பரில் நடைபெறும் “யங் ஷெப்பர்ட் ஆஃப் த இயர்” போட்டிக்குத் தயாராகி வருகின்றனர். இதற்கு முன் நடந்த வேளாண் கண்காட்சியில், கெவின் முதலிடம் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.

விருந்தினர்களின் தனிமையை போக்கும் நாய் சேவை – சீன ஹோட்டலின் பின்னணி என்ன?

சீனாவின் வுஹான் நகரில் உள்ள கன்ட்ரி கார்டன் பீனிக்ஸ் என்ற ஹோட்டல் நாய்களை விரும்புவோருக்கென புதுமையான சேவையை வழங்கி வருகிறது. இந்த ஹோட்டலுக்கு வரும் விருந்தினர்கள் சுமார் ₹4,700 (385.39 யுவான்) செலவில... மேலும் பார்க்க

Guinness Records: “விமானத்தைக் கூட சாப்பிட்ட மனிதர்” – கின்னஸ் சாதனை படைத்த மிச்சேல் லொட்டிடோ யார்?

உணவு போல உலோகப் பொருட்களைச் சாப்பிட்ட மனிதராக பிரான்ஸைச் சேர்ந்த மிச்சேல் லொட்டிடோ (Michel Lotito) என்பவர் உலகம் முழுவதும் பிரபலமானார்.உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த வினோதமான சாதனைகளில் ஒன்றாக பிர... மேலும் பார்க்க

காணாமல் போன அமெரிக்க பெண்; ஸ்காட்லாந்து காட்டில் ஆப்ரிக்கப் பழங்குடி குழுவுடன் வாழும் ஆச்சரியம்!

அமெரிக்காவிலுள்ள டெக்சாஸைச் சேர்ந்த பெண் ஒருவர் காணாமல் போனவர் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஸ்காட்லாந்தின் ஜெட்பரோக் காட்டுப் பகுதியில் 'ஆப்ரிக்கப் பழங்குடி' என அழைக்கப்படும் குழுவுடன் வாழ்ந்து வர... மேலும் பார்க்க

Chennai Day: நூற்றாண்டைக் கடந்து நிற்கும் சென்னையின் மணிக்கூண்டுகள்! | Photo Album

புரசைவாக்கம்பட்டாளம்ரிப்பன் மாளிகைரிப்பன் மாளிகைசெண்டரல்செண்டரல்புரசைவாக்கம்புரசைவாக்கம்மிண்ட்மிண்ட்ஆர்.கே.நகர்ராயப்பேட்டைராயப்பேட்டைMadras Day: ராணி மேரி கல்லூரியில் சென்னை தின நிகழ்ச்சி; சென்னை சார்... மேலும் பார்க்க

Madras Day: ராணி மேரி கல்லூரியில் சென்னை தின நிகழ்ச்சி; சென்னை சார்ந்த ஓவியக் கண்காட்சி |Photo Album

Madras Day: `இன்னாது மெட்ராஸ் டே யா?- வட சென்னை மக்களின் வாழ்வியல் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல... மேலும் பார்க்க

Instagram: 'துபாயில் டு கேரளா' - பாட்டியின் பிறந்தநாளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விமானப் பணிப்பெண்!

துபாயில் எமிரேட்ஸ் விமானச் சேவையில் பணியாற்றும் ஜைனப் ரோஷ்னா என்ற பெண் தனது பாட்டியை ஆச்சரியப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளன்று கேரளா சென்றுள்ளார்.இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோ வை... மேலும் பார்க்க