மீனாட்சி சுந்தரம் தொடர் நிறைவு! இறுதிநாள் படப்பிடிப்பில் அழுத நடிகைகள்!
விருந்தினர்களின் தனிமையை போக்கும் நாய் சேவை – சீன ஹோட்டலின் பின்னணி என்ன?
சீனாவின் வுஹான் நகரில் உள்ள கன்ட்ரி கார்டன் பீனிக்ஸ் என்ற ஹோட்டல் நாய்களை விரும்புவோருக்கென புதுமையான சேவையை வழங்கி வருகிறது.
இந்த ஹோட்டலுக்கு வரும் விருந்தினர்கள் சுமார் ₹4,700 (385.39 யுவான்) செலவில் அறை முன்பதிவு செய்தால், அதோடு கோல்டன் ரெட்ரிவர், ஹஸ்கி, டெரியர் போன்ற பயிற்சி பெற்ற நாய்களின் நட்பையும் அனுபவிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

பெரும் வரவேற்பு
இந்த சேவையை அந்த ஹோட்டல் நிர்வாகம் ஜூலை மாதத்தில் தொடங்கியிருக்கிறது. ஆனால் சில வாரங்களிலேயே 300-க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் கிடைத்துள்ளன.
“வீட்டில் இருக்கும் பாசத்தைப் போல அனுபவம் தருகிறது” என்பதால் விருந்தினர்கள் அதிகம் விரும்புவதாக ஹோட்டல் நிர்வாகி தெரிவித்திருக்கிறார்.
பயிற்சி பெற்ற நாய்கள்
தற்போது ஹோட்டலில் 10 நாய்கள் உள்ளன. சில ஹோட்டலுக்கே சொந்தமானவை. மற்றவை தனியார் உரிமையாளர்களிடமிருந்து கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அனைத்தும் மருத்துவ பரிசோதனையும் சிறப்பு பயிற்சியும் பெற்ற நாய்களே இங்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருந்தினர்கள் தனிமையாக உணராமல், நாய்களுடன் நேரம் கழித்தால் சற்று மனநிம்மதி பெறுவார்கள் என்ற நோக்கத்துடன் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சட்ட சிக்கல்கள்
இதற்கிடையில் சட்ட நிபுணர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கூறுகின்றனர். “நாயால் ஏதேனும் விபத்து நடந்தால் ஹோட்டலே பொறுப்பேற்க வேண்டும்” என்று வழக்கறிஞர் டூ சிங்க்யூ தெரிவித்திருக்கிறார்.