செய்திகள் :

Balakrishna: `வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்...' - உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த நடிகர் பாலய்யா!

post image

புகழ்பெற்ற தெலுங்கு நடிகரும், முன்னாள் ஆந்திரப் பிரதேச முதல்வருமான நந்தமூரி தரக ராமாராவ் (N.T.R)-ன் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா.

அரங்கேற்ற சிங்கம்(Natasimham), பாலய்யா என தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர், 1974-ம் ஆண்டு தன் 14-வது வயதில் 'தத்தம்மா காலா' படத்தின் மூலம் திரைத்துரையில் கால் பதித்தார்.

அதைத் தொடர்ந்து அன்னதம்முல அனுபவம், சாகசமே வாழ்க்கை, கதாநாயகுடு, நிப்புலந்தி மனிஷி, டகு மகாராஜ், வீர சிம்ம ரெட்டி, பகவந்த கேசரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் பாலய்யா
நடிகர் பாலய்யா

இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது, ஆந்திர அரசு வழங்கும் சிறந்த நடிகருக்கான நந்தி விருது, SIIMA விருது எனப் பல விருதுகளையும் வென்றிருக்கிறார்.

இந்த நிலையில், திரைத்துறையில் நடிகர் பாலய்யாவின் 50-வது ஆண்டு இந்த ஆண்டுடன் நிறைவடைந்திருக்கிறது. அதனால், இங்கிலாந்தின் உலக சாதனை புத்தகமான 'கோல்ட் எடிஷன்' புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறார்.

இதன் மூலம், இந்திய சினிமாவில் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இத்தகைய சிறப்பைப் பெற்ற முதல் தெலுங்கு நடிகர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.

இது தொடர்பாக அவரின் மகள் பிராமணி நாரா, ``என் தந்தை நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு வாழ்த்துக்கள்! முன்னணி ஹீரோவாக 50 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறார்.

இப்போது உலக சாதனை புத்தகத்திலும் ஒரு சாதனை! நீங்கள் ஒரு உண்மையான இயற்கை சக்தி, திரைத்துறையின் சின்னம். இரக்கமுள்ள தலைவர்.

உங்களின் இந்த நம்பமுடியாத பயணத்திற்கு உலகளாவிய அங்கீகாரத்தைப் பார்த்து மிகவும் பெருமைப்படுகிறேன். எங்கள் பெருமை, எங்கள் ஹீரோ" எனப் பதிவிட்டிருக்கிறார்.

நடிகர் பாலய்யா
நடிகர் பாலய்யா

அதைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேச முதல்வர் என் சந்திரபாபு நாயுடு தன் எக்ஸ் பக்கத்தில், ``தலைமுறை தலைமுறையாக மக்களால் போற்றப்பட்டும், சினிமா மீதான அர்ப்பணிப்புக்காகவும், ஆர்வத்திற்காகவும் கொண்டாடப்படுகிறார்.

ஸ்ரீ நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 50 ஆண்டுகால முன்னணி கதாநாயகன் இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு பொன்னான அத்தியாயமாக உள்ளது.

உலக சாதனை புத்தகம், இங்கிலாந்து வழங்கிய அங்கீகாரம் பாலய்யாவின் இந்த பயணத்திற்கு ஒரு சிறந்த சான்றாகும். வரலாற்று மைல்கல்." எனப் பாராட்டியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

நியூயார்க்கில் வலம் வந்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, நியூயார்க்கில் நடைபெற்ற 43-வது இந்திய தின அணிவகுப்பில் கை கோர்த்து நடந்து சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக... மேலும் பார்க்க

Nagarjuna: "காலைல 6 மணிக்கு அவர் ஆஃபிஸ் வெளியே நின்னேன்" - நாகர்ஜுனா பகிரும் சுவாரஸ்யம்

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நாகார்ஜுனா நடித்திருந்தார்.தெலுங்கு சினிமாவின் பிரபல... மேலும் பார்க்க

Tollywood: நடிகர்களுக்கு கோடிகளில் சம்பளம்; ஆனால், தொழிலாளர்களுக்கு? - வேலைநிறுத்தப் பின்னணி என்ன?

தெலுங்கு சினிமாவின், திரைத்துறை தொழிலாளர் கூட்டமைப்பு (TFIEF) நடத்தும் வேலைநிறுத்தம் நேற்று 13-வது நாளை தொட்டிருக்கிறது. தமிழ் சினிமாவுக்கு எப்படி ஃபெப்சி அமைப்பு இருக்கிறதோ அதுபோல, தெலுங்கு சினிமாவுக... மேலும் பார்க்க

Mrunal: 'நான் பேசுனது தப்புதான்'- சக நடிகையை உருவகேலி செய்ததற்கு வருத்தம் தெரிவித்த மிருணாள் தாகூர்

நடிகை பிபாஷா பாசு குறித்து மிருணாள் தாகூர் பேசிய வீடியோ சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் மிருணாள் தாகூர் அது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார். 'சீதா ராமம்’ படம் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மிரு... மேலும் பார்க்க

Rashmika Mandana: "நாம எல்லாரும் சந்தித்து ரொம்ப நாள் ஆச்சு" - கீதா கோவிந்தம் படம் குறித்து ரஷ்மிகா

கன்னடத்தில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, பிறகு தெலுங்கில் நடிக்க ஆரம்பித்தார். 2018-ம் ஆண்டு வெளியான ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா முதல்முறையாக ஜோடி சேர்ந்தனர். அவர்கள... மேலும் பார்க்க

``யாராக இருந்தாலும் சட்டத்துக்கு முன்பு சமம்" - நடிகர் தர்ஷனின் ஜாமீனை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!

பிரபல கன்னட நடிகரான தர்ஷனின் தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் வம்பிழுத்த தர்ஷனின் ரசிகர் ரேணுகா சுவாமி என்பவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த வழக்கில... மேலும் பார்க்க