செய்திகள் :

காலை உணவுத் திட்டத்தால் என்ன பயன்? ஆய்வு முடிவுகள் வெளியீடு!

post image

தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தால் ஏற்பட்ட பயன்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் கடந்த 2022 செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மொத்தம் 30,992 பள்ளிகளில் 18.50 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

தொடர்ந்து, ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் அமைந்துள்ள அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் திட்டம் அடுத்தடுத்து விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் ஏற்பட்ட பயன்கள் குறித்து தமிழக அரசு நடத்திய ஆய்வின் முடிவுகளை அரசின் செய்தித் தொடர்பாளர் அமுதா வெளியிட்டார்.

செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:

“காலை உணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகைப்பதிவு அதிகரித்துள்ளது. தாமதமின்றி சரியான நேரத்தில் நாள்தோறும் பள்ளிக்கு வரும் மாணவர்கள், சோர்வின்றி பாடத்தை கவனித்து கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்கள்.

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. பள்ளிகளில் ஆரோக்கியமான காய்கறி உணவு வழங்கப்படுவதால், வீட்டிலும் அதுபோன்ற ஆரோக்கியமான உணவுகளை குழந்தைகள் கேட்டு வாங்கி சாப்பிடுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

வேலைக்கு செல்லும் பெண்கள் அவர்களின் வேலைப் பளு குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பள்ளிகளில் கை கழுவி சாப்பிடும் பழக்கமும் மாணவர்களிடம் கொண்டுவரப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உணவின் அளவு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், குழந்தைகள் திருப்தி தெரிவித்துள்ளனர். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

காலை உணவுத் திட்டத்தின் 5 ஆம் கட்டத்தை சென்னை மயிலாப்பூரில் நாளை காலை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்கவுள்ளார். இந்த விரிவாக்கத்தின் மூலம் கூடுதலாக 2,429 பள்ளிகளைச் சேர்ந்த 3.06 லட்சம் குழந்தைகள் பயன்பெறவுள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.

Study results on the benefits of the breakfast program

இதையும் படிக்க : ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கினால் 10 ஆண்டுகள் சிறை!

ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய விவகாரம்: அதிமுகவினர் 14 பேர் மீது வழக்குப்பதிவு!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார கூட்டத்தில், ஆம்புலன்ஸை தடுத்து அதில் இருந்த ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுகவினர் 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதிமுக பொது... மேலும் பார்க்க

இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கை, சென்னை உரிமையியல் நீதிமன்றம் நிராகரிக்க மறுத்ததற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவ... மேலும் பார்க்க

5 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை எச்சரிக்கை!

தமிழகத்தில் 5 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், ஆகஸ்ட் 27, 28ல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், அடுத்த 48 மணி ந... மேலும் பார்க்க

நெல்லை ஆணவக் கொலை: முதல்வரைச் சந்தித்த கவினின் தந்தை!

நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷின் தந்தை இன்று(ஆக. 25) முதல்வரைச் சந்தித்துப் பேசியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் கவின... மேலும் பார்க்க

சாதாரண மக்களுக்காக செயலாற்றியவா் வசந்திதேவி!

திருச்சி: திருச்சியில் மறைந்த கல்வியாளரும், பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் முன்னாள் தலைவருமான வே. வசந்திதேவிக்கு புகழஞ்சலிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் கட... மேலும் பார்க்க

நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்: திருமுருகன்பூண்டி நகர்மன்ற உறுப்பினர்கள் போராட்டம்!

அவிநாசி: திருமுருகன்பூண்டியில் திமுக வார்டுகளை தவிர, பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் செய்வதைக், கண்டித்து கூட்டத்தில் அனைத்துக் கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் திங்கள்கிழமை உள்ளிருப்பு போராட்டத்... மேலும் பார்க்க