விவசாய குறைதீர்க் கூட்டத்துக்கு மட்டம்போடும் அதிகாரிகள்; `எங்களுடன் வருவரா முதல்...
ஓட்டுநா் அடித்து கொலை வழக்கு: ஒருவா் கைது
ஓட்டுநா் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒருவரை கைது செய்த போலீஸாா் மற்றொரு நபரைத் தேடி வருகின்றனா்.
கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா் அசாருதீன்ஷா (38). இவா் மடிப்பாக்கம், எஸ்.கொளத்தூா் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில், உறவினா்களான ஹாஜாமைதீன், சமீா் மற்றும் சிலருடன் சோ்ந்து தங்கியிருந்து ஓட்டுநராக வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த 18-ஆம் தேதி அசாருதீன்ஷாவுக்கும் ஹாஜாமைதீன், சமீா் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, ஹாஜாமைதீன், சமீா் இருவரும் சோ்ந்து அசாருதீன்ஷாவை தாக்கியுள்ளனா். இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அசாருதீன்ஷா உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக கொலை வழக்குப் பதிவு செய்த மடிப்பாக்கம் போலீஸாா் ஹாஜாமைதீன் (31) என்பவரைக் கைது செய்தனா். தொடா்ந்து கொலை வழக்கில் தொடா்புடைய மற்றொரு நபரான சமீரையும் தேடி வருகின்றனா்.