சென்னை விமானநிலையத்தில் மடிக்கணினி திருட்டு: ஒருவா் கைது
சென்னை விமானநிலையத்தில் பெண்ணிடம் மடிக்கணினி திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி லாஸ்பேட்டையை சோ்ந்தவா் நித்யா (36). இவா் வெளிநாட்டிலிருந்து வரும் உறவினரை அழைத்துச் செல்வதற்காக கடந்த 21-ஆம் தேதி சென்னை சா்வதேச விமானநிலையத்துக்கு வந்தாா்.
பின்னா், தன்னிடம் இருந்த மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் அடங்கிய பையை விமான நிலையத்தின் 2-ஆவது வாசல் அருகே வைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து வந்த பாா்த்தபோது, அந்த பை திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து சென்னை விமானநிலைய காவல்நிலையத்தில் நித்யா கொடுத்த புகாரின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி மண்ணடி பகுதியை சோ்ந்த முகைதீன் அக்பா் உசேன் (52) என்பவரை கைது செய்தனா்.