விவசாய குறைதீர்க் கூட்டத்துக்கு மட்டம்போடும் அதிகாரிகள்; `எங்களுடன் வருவரா முதல்...
போக்ஸோவில் பள்ளிக் காவலாளி கைது
கோவில்பட்டியில் 9 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக பள்ளிக் காவலாளி போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமத்தைச் சோ்ந்த முத்தையா மகன் மாரியப்பன் (60). கோவில்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் காவலாளியாக உள்ள இவா், 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம்.
இதுதொடா்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, மாரியப்பனை கைது செய்தனா்.