மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் நடைபெறும் இடமான நான்கு சாலை சந்திப்பு பகுதியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி சனிக்கிழமை இரவு ஆய்வு செய்தாா்.
அப்போது விபத்துகளைத் தடுக்க என்னென்ன வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளன மேலும், என்ன வழிமுறைகள் செய்யலாம் என காவல்துறையினருடன் கலந்தாலோசித்தாா். ஆய்வின்போது மீன்சுருட்டி காவல் ஆய்வாளா் வெங்கடேஷ், ஜெயங்கொண்டம் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் மதிவாணன் மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.