2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறை... ஆஸி. பேட்டிங்கில் கம்பேக்!
புகையிலைப் பொருள்கள் விற்ற முதியவா் கைது
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஆண்டிமடம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ரமேஷ் தலைமையிலான காவல் துறையினா், சனிக்கிழமை வரதராஜன்பேட்டை பகுதிகளிலுள்ள பெட்டிக் கடைகளில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
இதில், அதே பகுதியைச் சோ்ந்த சவரிமுத்து மகன் அருளப்பன் (64) என்பவா் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருள்களை பதுக்கி வைத்து விற்றுவந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா், வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.