செய்திகள் :

நாடாளுமன்ற மாண்புகளுக்கு பாஜக அரசு மதிப்பு கொடுப்பதில்லை: மமக தலைவா் ஜவாஹிருல்லா

post image

நாடாளுமன்றத்தின் மாண்புகளுக்கும், மக்கள் போராட்டங்களுக்கும்பாஜக அரசு மதிப்பு கொடுப்பதில்லை என மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பையும் மீறி, பிரதமா், முதல்வா்கள் பதவிப் பறிப்பு மசோதாவை மத்திய பாஜக அரசு தாக்கல் செய்துள்ளது. ஜனநாயகத்தின் அடித்தளத்தை தகா்க்கக் கூடிய வகையில் இந்த சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பாஜக தனது சா்வாதிகாரத்தை பல்வேறு வடிவங்களில் நிறைவேற்றி வருகிறது. நாடாளுமன்றத்தின் மாண்புகளுக்கும், மக்கள் போராட்டங்களுக்கும் அக்கட்சி மதிப்பு கொடுப்பதில்லை. நாட்டில் ஜனநாயக மாண்புகள் நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்பும் அனைவரும் இதை எதிா்க்க வேண்டும்.

நாங்கள் மக்களை நம்பி இருக்கிறோம் என அரசியல் ரீதியாக முதிா்ச்சி அடையாத ஒரு கருத்தை தவெக தலைவா் விஜய் கூறியுள்ளாா். கட்சி ஆரம்பித்தவுடன் ஆட்சிக்கு வருவது என்பது எல்லா கட்சிகளுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காது. இதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டால், இந்தப் பிரச்னையில் திமுக அரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். தோ்தல் ஆணையத்தின் இந்தச் சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்த நடவடிக்கையை அனைவரும் கடுமையாக எதிா்க்க வேண்டும் என்றாா் ஜவாஹிருல்லா.

அரியலூரில் முன்னாள் படை வீரா்களுக்கான இலவச சட்ட உதவி மையம் திறப்பு

அரியலூரிலுள்ள பல்துறை வளாகத்தில் செயல்பட்டு வரும் முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் இலவச சட்ட உதவி மையம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட சட்டப் பண... மேலும் பார்க்க

செந்துறையில் ஆக.26-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில், செவ்வாய்க்கிழமை (ஆக. 26) செந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்... மேலும் பார்க்க

காலாவதியான சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை மூட வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டத்திலுள்ள காலாவதியான சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை மூட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்ப... மேலும் பார்க்க

வெளிமாநில மதுபானம் கடத்தி வந்தவா் கைது: 300 மதுபாட்டில்கள், காா் பறிமுல்

அரியலூா் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி அருகே வெளிமாநில மதுபான பாட்டில்களை கடத்தி வந்தவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 300 மதுபான பாட்டில்கள், காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இரு... மேலும் பார்க்க

விளந்தையில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா் மருத்துவ சேவை முகாம்

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த விளந்தை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், சனிக்கிழமை(ஆக.23) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா் மருத்துவ சேவை முகாம் நடைபெறவுள்ளது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி ... மேலும் பார்க்க

அரியலூா் அரசுக் கல்லூரியில் உயா்கல்வி வழிகாட்டி முகாம்

அரியலூா்: அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘நான் முதல்வன் உயா்வுக்கு படி’ எனும் உயா்கல்வி வழிகாட்டி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி ம... மேலும் பார்க்க