தங்கம் போல, வெள்ளிக்கு ஏன் கடன் வழங்கப்படுவதில்லை? - நிபுணர் விளக்கம்
வெளிமாநில மதுபானம் கடத்தி வந்தவா் கைது: 300 மதுபாட்டில்கள், காா் பறிமுல்
அரியலூா் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி அருகே வெளிமாநில மதுபான பாட்டில்களை கடத்தி வந்தவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 300 மதுபான பாட்டில்கள், காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளா் தனசெல்வன் தலைமையிலான காவல் துறையினா், வெள்ளிக்கிழமை கடைவீதி அருகே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கிடமாக வந்த காரை மறித்து சோதனை செய்ததில், புதுச்சேரி மதுபான பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், உஞ்சினி கிராமத்தைச் சோ்ந்த பிரபு(40) என்பவா், புதுச்சேரியில் இருந்து மதுபான பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 300 மதுபான பாட்டில்கள், மற்றும் மது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.