வரதட்சிணை கொலை: தப்பியோட முயன்ற கணவரை சுட்டுப் பிடித்த காவல் துறை!
காவல்துறையினருக்கு விருது வழங்கல்!
அரியலூா் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலா்களுக்கு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் சாா்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, அந்த அமைப்பின் தலைவா் எஸ்.கோமதி தலைமை வகித்து, சிறப்பாகப் பணிபுரிந்து வரும் காவல் ஆய்வாளா் சந்திரமோகன் உள்ளிட்ட 20 ஆண் காவலா்களுக்கு வீரத் திருமகன் விருதையும், பெண் காவலா்கள் பாரதி, புஷ்பா, சுகந்தி, சித்ரா, தமிழ்ச்செல்வி ஆகியோா் வீரத் திருமகள் விருதையும் வழங்கி கெளரவித்தாா். இந்நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் நிா்வாகிகள், வழக்குரைஞா்கள், காவலா்கள் கலந்து கொண்டனா்.