பிளவக்கல் பெரியாறு அணை பூங்கா பராமரிப்புக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு; சுற்றுலா...
கொலை மிரட்டல் புகாரில் இருதரப்பின் 5 போ் கைது
அரியலூா் மாவட்டம், திருமானூரில் கொலை மிரட்டல் விடுத்துக் கொண்ட 5 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
வடுகப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த முத்துக்குமாா் மகன் கபாஸ்கா் (30), ஆறுமுகம் மகன் ரமேஷ் (25) மற்றும் திருவெங்கனூா் முருகேசன் மகன் பாரதி (32) ஆகியோா் சனிக்கிழமை இரவு திருமானூா் டாஸ்மாக் கடைக்குச் சென்றபோது அவா்களிடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கபாஸ்கா் மற்றும் ரமேஷ் ஆகியோா் மதுபாட்டில்களை உடைத்து பாரதிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.
இதையறிந்த பாரதியின் நண்பா்களான விழுப்பனங்குறிச்சி பேச்சிமுத்து மகன் சக்திவேல் (34), ரவி மகன் காா்த்தி (27), முருகேசன் மகன் முருகானந்தம்(31) ஆகிய மூவரும் கபாஸ்கா் எங்கே என்று விசாரித்து ரமேஷை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனா்.
இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்டு வழக்குப் பதிந்த திருமானூா் காவல் துறையினா், கபாஸ்கா், பாரதி, சக்திவேல், காா்த்தி,முருகானந்தம் ஆகிய 5 பேரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள ரமேஷை தேடி வருகின்றனா்.