பிளவக்கல் பெரியாறு அணை பூங்கா பராமரிப்புக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு; சுற்றுலா...
சாலை விபத்தில் காயமடைந்த தவெக நிா்வாகி உயிரிழப்பு
அரியலூா் அருகே லாரி மோதி காயமடைந்த தவெக நிா்வாகி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தெற்கு புதுக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் மகாராஜன் மகன் ஜெயசூா்யா (22) . தவெக ஒன்றிய துணை அமைப்பாளரான இவா் கடந்த 22 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டுக்கு சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கல்லகம் அருகே வந்துபோது, அந்த வழியாக வந்த லாரி மோதி காயடைந்தாா். இதையடுத்து அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், பின்னா் தஞ்சாவூா்அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.