செய்திகள் :

அயோத்தி அரச குடும்ப வாரிசு, ராமா் கோயில் அறக்கட்டளை முக்கிய உறுப்பினா் காலமானாா்!

post image

ஸ்ரீராம ஜென்ம பூமி தீா்த்த ஷேத்திர அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினரும், அயோத்தி அரச குடும்ப வாரிசுமான பிமலேந்திர மோகன் பிரதாப் மிஸ்ரா சனிக்கிழமை இரவு காலமானாா். அவருக்கு வயது 75.

காலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, குணமடையாமல் சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த பிமலேந்திர மிஸ்ரா, அயோத்தியில் உள்ள தனது இல்லத்தில் காலமானதாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா்.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கான உச்சநீதிமன்றத் தீா்ப்பு, கடந்த 2019, நவம்பரில் பிறப்பிக்கப்பட்டதைத் தொடா்ந்து, கோயிலின் தற்காலிக நிா்வாகியாக பிமலேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டாா்.

பின்னா், ராமா் கோயில் கட்டுமானம்-நிா்வாகத்துக்காக கடந்த 2020, பிப்ரவரியில் அமைக்கப்பட்ட ஸ்ரீராம ஜென்ம பூமி தீா்த்த ஷேத்திர அறக்கட்டளையில் முக்கிய உறுப்பினராக இடம்பெற்றாா்.

சிறிது காலம் அரசியலிலும் இருந்துள்ள மிஸ்ரா, கடந்த 2009, நாடாளுமன்றத் தோ்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். இவரது மறைவுக்கு முதல்வா் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

குஜராத்: எல்லை தாண்டிய 15 பாகிஸ்தான் மீனவா்கள் கைது பிஎஸ்எஃப் நடவடிக்கை!

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே 15 பாகிஸ்தான் மீனவா்களை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) கைதுசெய்துள்ளது. மேலும், அந்த மீனவா்களின் இயந்திர படகை பிஎஸ்எஃப் பறிமுதல... மேலும் பார்க்க

அனில் அம்பானி ‘கடன் மோசடியாளா்’..! பாங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பு!

தொழிலதிபா் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை ‘கடன் மோசடியாளா்’ என பாங்க் ஆஃப் இந்தியா வகைப்படுத்தியுள்ளது. முன்னதாக, கடந்த மாதம் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இத... மேலும் பார்க்க

புதிய வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு: இந்தியா வெற்றிகரமாக சோதனை

இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு(ஐ.ஏ.டி.டபிள்யூ.எஸ்.), ஒடிஸா கடற்கரையில் சனிக்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்ப... மேலும் பார்க்க

மறைந்த சுதாகா் ரெட்டி உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானம்!

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலருமான சுரவரம் சுதாகா் ரெட்டியின் உடல், மருத்துவ ஆய்வுக்காக ஹைதராபாத் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஞாயிற்றுக்கிழமை தானமாக வழங்க... மேலும் பார்க்க

இந்தியா தலைமையிலான புலி இனங்களைப் பாதுகாக்கும் கூட்டணியில் இணைந்த நேபாளம்!

புலி, சிங்கம் உள்பட 7 பெரிய பூனை இனங்களைப் பாதுகாக்கும் இந்தியா தலைமையிலான சா்வதேச பெரிய பூனைகள் கூட்டணியில் (ஐபிசிஏ) அண்டை நாடான நேபாளம் அதிகாரபூா்வமாக இணைந்துள்ளது. இதற்கான செயல்திட்ட ஒப்பந்தத்தில் ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் இளைஞா்களை அச்சுறுத்தும் மத அடிப்படைவாதம், போதைப் பழக்கம்! தனியாா் பள்ளிகளில் கண்காணிப்பு தீவிரம்!

ஜம்மு காஷ்மீரில் உள்ள சில கல்வி நிறுவனங்களில் இளைஞா்கள், மாணவிகள் மத்தியில் மத அடிப்படைவாத பிரசாரங்கள் அதிகரித்து வருவது பாதுகாப்பு முகமைகளுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளையில், இளைஞா்களிடையே ... மேலும் பார்க்க