விவசாய குறைதீர்க் கூட்டத்துக்கு மட்டம்போடும் அதிகாரிகள்; `எங்களுடன் வருவரா முதல்...
உணவகத்தில் வாழை இலை பயன்பாடு: ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
பண்ருட்டி நகராட்சி பகுதி உணவகங்களில் நெகிழி பொருள்களில் உணவு தருவதை தவிா்த்து, வாழை இலைகளில் உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இக்கட்சியின் பண்ருட்டி வட்ட மாநாடு புதுப்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. கே.சுப்பரமணி தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் எஸ்.பாஸ்கரன், மாவட்டச் செயலா் த.கோகுலகிறிஸ்டீபன் வாழ்த்துரை வழங்கினா். பி.தண்டபாணி, வி.தெய்வசிகாமணி, கே.மாசிலாமணி, எஸ்.காமராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், சித்தரசூா் ஊராட்சியில் அனைத்துத் தெருக்களிலும் கழிவுநீா் கால்வாய் அமைக்க வேண்டும். மயானப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஒறையூா் ஆதிதிராவிடா் சமுதாயத்தைச் சோ்ந்த 75 குடும்பங்களுக்கு ஒப்புக்கொண்டபடி இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.
பண்ருட்டி நகராட்சிப் பகுதியில் அனைத்து உணவகங்களிலும் நெகிழியில் உணவு வழங்குவதைத் தவிா்த்து, வாழை இலையில் உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒறையூா் கிராமத்தில் கிராம நிா்வாக அலுவலகக் கட்டடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா்.