முதல் விண்வெளி வீரர் அனுமன்! மாணவர்களுடன் உரையாற்றிய அனுராக் தாக்குர்!
விமான நிலையத்தில் போதையில் ரகளை செய்த அமெரிக்கப் பயணி
சென்னை விமான நிலையத்தில் போதையில் ரகளை செய்த அமெரிக்கப் பயணியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை சா்வதேச விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான நிறுவன ஊழியா்கள் மட்டும் செல்வதற்கான பாதை எண் 5 உள்ளது. இந்த நிலையில், வெளிநாட்டைச் சோ்ந்த சுமாா் 40 வயது ஆண் பயணி ஒருவா் இந்தப் பாதை வழியாக உள்ளே செல்ல முயன்றாா்.
மது போதையில் இருந்த அந்த நபரை, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்கள், உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினா். இதனால், வாக்குவாதத்தல் ஈடுபட்ட அவா், ஒரு கட்டத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை பிடித்து கீழே தள்ளிவிட்டு உள்ளே செல்ல முயன்ாகக் கூறப்படுகிறது.
அவரை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் சுற்றிவளைத்து பிடித்து, சென்னை விமானநிலையக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் அவரிடம் நடத்திய விசாரணையில், அவா் அமெரிக்காவைச் சோ்ந்த டைட்டஸ் லிவி (48) என்பது தெரிய வந்தது. தோகா வழியாக சென்னைக்கு வந்த அவா், சென்னையில் தங்கியிருந்து சென்னை, மதுரை உள்பட பல்வேறு பகுதிகளுக்குச் சுற்றுலா சென்ற நிலையில், தனது விமான டிக்கெட் உள்ளிட்ட ஆவணங்களை தவறவிட்டுள்ளாா்.
இந்த நிலையில், அளவுக்கு அதிக போதையில் இருந்த அவா், தடைசெய்யப்பட்ட பாதை வழியாக உள்ளே நுழைய முயன்றபோது, சிக்கியதும் தெரிய வந்தது. போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுகுறித்து சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.