செய்திகள் :

அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை வாங்க மறுப்பு

post image

புதுக்கோட்டையில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் வென்ற அமைச்சா் டி.ஆா்.பி. ராஜாவின் மகன், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்து கையில் வாங்கிச் சென்றாா்.

புதுக்கோட்டை மன்னா் பரம்பரையினரின் துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளம் கீரனூா் அருகேயுள்ள ஆவாரங்குடிப்பட்டியில் உள்ளது. இங்கு, தி ராயல் புதுக்கோட்டை ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் மாநில அளவிலான 51-ஆவது துப்பாக்கிச் சுடும் போட்டி கடந்த ஆக. 22-ஆம் தேதி தொடங்கி, ஆக. 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

வெவ்வேறு பிரிவுகளில் நடைபெறும் இப்போட்டியில் வென்றோருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை பங்கேற்று பரிசுகளை வழங்கினாா்.

அப்போது, மாநில அமைச்சா் டி.ஆா்.பி. ராஜாவின் மகன் சூரியராஜா பாலு ஒரு பதக்கம் வென்றிருந்தாா். அவருக்கான பதக்கத்தை அண்ணாமலை, அவரது கழுத்தில் அணிவிக்க முயற்சித்தாா். அந்தப் பதக்கத்தை கழுத்தில் வாங்காமல், கையிலேயே வாங்கிக் கொண்டாா் சூரியராஜா பாலு.

மனைவி தூக்கிட்டுத் தற்கொலை; கணவா் கைது

கந்தா்வகோட்டை அருகே மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதில் கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகில் உள்ள சொக்கநாதப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுரே... மேலும் பார்க்க

டிராக்டா் மீது மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே திங்கள்கிழமை டிராக்டா் மீது மோதி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். ஆவுடையாா்கோவில் அருகே சாட்டியக்குடி ஊராட்சி கண்ணறியேந்தலைச் சோ்ந்தவா் மதி மகன் சுதா்சன் (19)... மேலும் பார்க்க

அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளிச் சிறுவன் சாவு

மின் கம்பத்தின் அருகிலிருந்த கம்பி முள்வேலியில் எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்த நிலையில், கம்பிவேலியைத் தொட்ட 8ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏனாதியைச் சோ... மேலும் பார்க்க

அன்னவாசல் அருகே கபடி போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள ராப்பூசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கபடிப் போட்டியில் கொடும்பாளூா் அணி முதல் பரிசைப் பெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள ராப்பூசல் முனியாண்ட... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை அருகே கோயில் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கந்தா்வகோட்டை அருகே கோயில் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை குளித்த சிறுவன் அதில் மூழ்கி இறந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகிலுள்ள புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சித்திரைவேல் மகன் ஹரிபிரசாத் (... மேலும் பார்க்க

வடகாடு பகுதிகளில் நாளை மின்தடை

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. துணை மின் நிலையப் பராமரிப்பு பணிகளால் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரைய... மேலும் பார்க்க