BCCI: 'உறவை முறித்துக்கொள்கிறோம்'; டிரீம் 11- பிசிசிஐ ஒப்பந்தம் ரத்து; காரணம் என...
அன்னவாசல் அருகே கபடி போட்டி
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள ராப்பூசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கபடிப் போட்டியில் கொடும்பாளூா் அணி முதல் பரிசைப் பெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள ராப்பூசல் முனியாண்டவா் திடலில் சிவா நினைவு கபடிக் குழுவினரால் மாநில அளவிலான கபடிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
இந்தப் போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தஞ்சாவூா் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. போட்டிகள் அனைத்தும் நாக்அவுட் முறையில் நடைபெற்றன.
இந்தப் போட்டியில் முதல் பரிசு ரூ. 40 ஆயிரத்தை கொடும்பாளூா் அணியும், இரண்டாம் பரிசு ரூ. 30 ஆயிரத்தை வெள்ளைக்கவுண்டம்பட்டி அணியும், மூன்றாம் பரிசு ரூ. 20 ஆயிரத்தை அகரப்பட்டி அணியும், நான்காம் பரிசு ரூ.20 ஆயிரத்தை கரூா் முதலைப்பட்டி அணியும் பெற்றன.
இந்த அணிகளுக்கு தனித்தனியாக கோப்பைகள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்று வெற்றி வாய்ப்பை இழந்த அணிக்கு ரொக்கப் பரிசு, பதக்கங்கள் என சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ராப்பூசல் கிராம இளைஞா்கள் செய்தனா்.